அடிக்கடி டீ குடிப்பீங்களா.... ICMR விடுத்துள்ள எச்சரிக்கையை அவசியம் படிங்க

டீ அளவோடு அருந்தினால் பாதிப்பு இல்லை. அளவிற்கு அதிகமான டீ உங்கள் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் என ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) எச்சரித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 1, 2024, 08:09 PM IST
  • அளவிற்கு அதிகமாக தேநீர் அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
  • தேநீர் மற்றும் காபி பற்றி ICMR விடுத்துள்ள எச்சரிக்கை.
  • பால் இல்லாமல் தேநீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
அடிக்கடி டீ குடிப்பீங்களா.... ICMR விடுத்துள்ள எச்சரிக்கையை அவசியம் படிங்க title=

இந்தியாவில், மட்டுமல்ல, டீ என்பது வெறும் காலை பானமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அது உணர்வோடு கலந்த ஒரு விஷயம். காலையோ, மாலையோ எதுவானாலும் டீ இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் உள்ள பலரைக் காணலாம். பலர் டீக்கு அடிமையாகி, எந்த நேரத்திலும் டீ கிடைத்தாலும், வேண்டாம் என்று சொல்ல முடியாத மனநிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஆரொக்கியமான உணவு கூட அளவிற்கு அதிகமானால் நஞ்சு தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில், டீயை அளவோடு அருந்தினால் பாதிப்பு இல்லை. அளவிற்கு அதிகமான டீ உங்கள் ஆரோக்கியத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என ICMR  என்னும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் NIN என்னும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் இரண்டும் இணைந்து சில காலத்திற்கு முன்பு தங்கள் உணவு பழக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டன. அதில் தேநீர் மற்றும் காபி ஆகியவை அளவிற்கு அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள் கூறப்பட்டிருந்தது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.

பாலில் தயாரிக்கப்பட்ட தேநீர் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள்

பொதுவாக பலர் அருந்தும் பாலில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்துவது குறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், அளவிற்கு அதிகமாக தேநீர் அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், பால் இல்லாமல் தேநீர் அருந்தலாம் என்கின்றனர் வல்லுநர்கள். பால் இல்லாமல் தேநீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு (Health Tips) நன்மை பயக்கும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர, இந்த வகை தேநீரை உட்கொள்வது கரோனரி தமனி நோய் மற்றும் வயிற்று புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தேநீர் மற்றும் காபி பற்றி ICMR விடுத்துள்ள எச்சரிக்கை

ஆரோக்கியமானது என்றாலும், அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தேநீர், காபி இரண்டுக்கும் இது பொருந்தும். தேநீர் மற்றும் காபியில் டானின் காணப்படுகிறது, இது உடலின் இரும்பு சத்தை உறிஞ்சும் திறனை பாதிக்கும். இதனால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு ரத்தசோகைக்கு ஆளாக நேரிடும். இது தவிர டீ மற்றும் காபியை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை உண்டாக்கி இதய நோய்களை உண்டாக்கும். அதிகப்படியான டீ மற்றும் காபி குடிப்பதால் வயிறு வீக்கம், மலச்சிக்கல், நீரிழப்பு, தூக்கமின்மை, செரிமானம், தலைவலி மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கொழுப்பு கரைய... நீங்கள் கை விட வேண்டிய சில பழக்கங்கள்

நாளொன்றுக்கு ஒருவர் எவ்வளவு டீ அல்லது காபி குடிக்கலாம்

ICMR வழிகாட்டுதல்களின்படி, ஒரு நபர் 300mg காஃபின் மட்டுமே உட்கொள்ள வேண்டும். தேநீர் மற்றும் காபி அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.

மேலும் படிக்க | 60+ வயதானவர்கள் கட்டாயம் இந்த பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்... டாக்டர் கூறும் அட்வைஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News