கொரோனா பரவலின் எதிரொலியாய், மருத்துவ சுகாதர வசதிகள் பற்றாக்குறையால் நாடு தவித்து வரும் நேரம் இது.
இந்த சந்தர்ப்பத்தில் மருத்துவப் பொருட்கள், ஆக்சிஜன், பிற உபகரணங்கள் என பல்வேறு அத்தியாவசிய தேவைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ளது இந்திய ரயில்வே.
இந்தியன் ரயில்வே தனது பிரத்யேக 185 டேங்கர்களில் 2960 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்துள்ளது.
Also Read | சீனாவின் ராக்கெட் கட்டுப்பாடிழந்து பூமியில் எங்கே வீழும்?
கொரோனாவை எதிர்த்துப் போராட மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என முன்களப் பணியாளர்கள் நேரிடையாய் களத்தில் இருக்க, மருத்துவ பொருட்களை நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு சென்று தனது பங்களிப்பை திறம்பட செய்கிறது இந்திய ரயில்வே.
இது வரை சுமார் 2960 மெட்ரிக் டன் அளவிலான திரவ மருத்துவ ஆக்சிஜனை 185 டேங்கர்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது.
47 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் மூலம் 185 டேங்கர்களின் உதவியுடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையுள்ள மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை துரிதமாக கொண்டு சேர்ப்பதே இந்தியன் ரயில்வேயின் நோக்கம்.
Also Read | World Test Championship இந்திய அணி அறிவிப்பு, ஜடேஜா உள்ளே
உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 729 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவுக்கு 174 மெட்ரிக் டன், மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு 249 மெட்ரிக் டன், டெல்லிக்கு 1334 மெட்ரிக் டன், ஹரியாணாவுக்கு 305 மெட்ரிக் டன், தெலங்கானாவுக்கு 123 மெட்ரிக் டன் என பல்வேறு மாநிலங்களுக்கும் திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வேயின் இந்த சேவை கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் இந்திய சமூகத்திற்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.
Also Read | இந்தியாவில் முழு லாக்டவுனை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR