Bad Breadth: வாய் துர்நாற்றத்திற்கு நிரந்திர தீர்வு காண ‘இதை’ செய்தால் போதும்..!!

வாய் துர்நாற்றத்தை போக்கும் வழிமுறைகள்: வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பலர், பல வகைகளில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்சனைக்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 22, 2021, 02:46 PM IST
  • பாக்டீரியாவால் ஏற்படும் வாய் துர்நாற்றம்
  • நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
  • பேக்கிங் பவுடர் கொண்டு கொப்புளிக்கலாம்

Trending Photos

Bad Breadth: வாய் துர்நாற்றத்திற்கு நிரந்திர தீர்வு காண ‘இதை’ செய்தால் போதும்..!! title=

Home remedies for Bad Breath:  தினமும் குளித்து, உடலை போதுமான அளவு சுத்தம் பராமரித்தாலும், வாய் துர்நாற்றம் காரணமாக பலர் தர்மசங்கடத்தை சந்திக்க வேண்டியிருக்கும். வேறொருவருடன் பேசும்போது, ​​​​அவர்களின் வாயிலிருந்து வரும் துர்நாற்றம், வீட்டில், பொது வாழ்க்கையில், பணியில் என பல இடங்களிலும், பாதிப்பையும் தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது. 

பற்களை அடிக்கடி சுத்தம் செய்தாலும் வாயில் துர்நாற்றம் வீசுவது ஏன் என்பது பலருக்குப் புரியவில்லை. இதற்கான காரணத்தையும் இந்த சிக்கலைச் சமாளிப்பதற்கான சிறந்த வழியையும் அறிந்து கொள்ளலாம். நீங்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால், உங்கள் இந்த பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு கிடைக்கும்.

பாக்டீரியாவால் ஏற்படும் துர்நாற்றம்

வாயில் இருந்து துர்நாற்றம் வருவதற்கு மிகப்பெரிய காரணம் வாயில் வளரும் பாக்டீரியாக்கள். இந்த பாக்டீரியாக்கள் சாப்பிட்ட பிறகு அல்லது குடித்த பிறகு சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா தானாகவே வாயில் வளரும். பல சமயங்களில் பையோரியா, ஈறு பிரச்சனைகள் அல்லது பற்களில் உள்ள புழுக்கள் போன்றவற்றால் வாயில் இருந்து துர்நாற்றம் வர ஆரம்பிக்கும்.

ALSO READ | Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!

தவிர குட்கா அல்லது பான் புகையிலையை சாப்பிடுபவர்களுக்கு வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் சேருகின்றன. இதனுடன், சொத்தை பற்கள் உள்ளவர்கள் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, வாய் துர்நாற்றம் பிரச்சனை இருக்கும். இப்பிரச்சனையால் சில சமயங்களில் மக்களின் தன்னம்பிக்கையும் குறைகிறது.

வாய் துர்நாற்றத்திற்கான நிவாரணம்

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்

வாய் துர்நாற்றம் ஒரு நபரின் தன்னம்பிக்கையை குலைக்கிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட சிறந்த வழி, அதிகமாக தண்ணீர் குடிப்பதாகும். தண்ணீர் குடிப்பதால் வாயில் வளரும் பாக்டீரியாக்கள் குறையும். இதனுடன், இடையில் தண்ணீரால் கொப்புளிக்கவும்.

ALSO READ | வெள்ளை அரிசி Vs பழுப்பு அரிசி: எது சிறந்த தேர்வு; ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன..!!

2. பேக்கிங் பவுடர் கலந்த நீரில் கொப்புளித்தல்

பேக்கிங் பவுடரும் வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஒரு சஞ்சீவி மருந்தாகும். ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர் கலக்கவும். அதன் பிறகு அந்த நீரில் வாயை கொப்பளிக்கவும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் பிரச்சனை நீங்கி எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

3. படிகாரம் (Alum)

பொதுவாக வீடுகளில் காணப்படும் படிகாரம் மிகவும் பயனுள்ள ஒன்று. வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள் படிகாரத்தைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்கு, ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து, அதில் படிகாரம் சேர்த்து கரைக்கவும். இதற்குப் பிறகு, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து படிகாரத்தை வெளியே எடுத்து விட்டு, இந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

இதற்குப் பிறகு, தினமும் காலை மற்றும் இரவு துலக்கிய பிறகு, படிகார நீரில் வாயை சுத்தம் செய்யவும். ​​​​உங்கள் வாயில் இந்த தண்ணீரை சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் வைத்திருந்து கொப்புளிக்கவும். இந்த தீர்வைக் கடைப்பிடிப்பதன் மூலம், வாய் துர்நாற்றம் பிரச்சனை பெரிய அளவில் குறைகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதனை அங்கீகரிக்கவில்லை.)

ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News