தொப்பை கொழுப்பைக் கரைக்க உதவும் பானம்: உடல் பருமனை குறைப்பதில் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. டயர் தேர்வு சரியாக இல்லை என்றால், உங்கள் எடை இழப்பு முயற்சிகள் எதுவும் பலனளிக்காது. உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, சோடா பானங்கள், செயற்கை பழச்சாறு மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற இனிப்பு நிறைந்த பானங்களை அதிகம் உட்கொள்வது தான். அவற்றில் சர்க்கரை மற்றும் கலோரிகள் மிக அதிகம். ஆனால், இவற்றில் ஊட்ட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை.
சர்க்கரை மற்றும் கலோரி நிறைந்த பானங்களை குடித்தால் நிச்சயம் நமக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். இதனால் புத்துணர்ச்சி ஏற்படும். இதன் காரணமாக, நம்மை அறியாமல் ஒரு நாளைக்கு பல பாட்டில்கள் குடித்து விடுவோம். இதனால் உடல் எடை மளமள வென்று அதிகரிக்கும். அதோடு, நீரிழிவு போன்ற நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். அதோடு அதிக சர்க்கரை எலும்புகளை வலுவிழக்கச் செய்து, முட்டு வலி பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க, மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற செயற்கை பானங்களை தவிர்த்து விட்டு, இயற்கை பானங்களை உட்கொண்டால், உடல் எடையை மளமள வென்று குறைக்க உதவும். வீட்டில் தயாரிக்கப்படும் இயற்கை பானத்தை குடிப்பதன் மூலம் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், உடல் கொழுப்பும் (Weight Loss Tips) கரையும்.
ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை கொடுக்கும் ஸ்பெஷல் ட்ரிங்க் குறித்து மருத்துவர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உணவியல் நிபுணர் ஷிகா, இது குறித்து கூறுகையில், நாம் அனைவருக்கு பிடித்த ஜல்ஜீரா என்னும் பானம் குறித்து குறிப்பிட்டுள்ளார். வீட்டில் தயாரிக்கப்படும் இந்த பானம் நார்ச்சத்து நிறைந்தது. இதில் சேர்க்கப்படும் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும். இதை வழக்கமாக குடித்து வந்தால் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும் ஆசையும் இருக்காது.
மேலும் படிக்க | அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்க
தொப்பை கொழுபபை கரைக்க உதவும் பானத்தை தயாரிக்கும் முறை (How To Prepare Weight Loss Drink)
மிக்ஸி ஜார் ஒன்றில், ஒரு கப் கொத்தமல்லி, ஒரு கிண்ணம் புதினா இலைகள், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள், ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் வறுத்த சீரகம், சிறிது கருப்பு உப்பு, அரை எலுமிச்சை மற்றும் பாதி பச்சை மிளகாய் சேர்க்கவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும். வீட்டில் தயாரிக்கப்பட்ட அருமையான ஜல்ஜீரா பானம் தயார். இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், உடல் எடை குறைவதோடு, பல ஆரோக்கிய நன்மைகளையும் பெறுவீர்கள்.
இயற்கையான இந்த பானத்தின் உதவியுடன், உடலில் உள்ள கொழுப்பு கரைவதோடு, ரத்தத்தில் உள்ள அழுக்குகளை அகற்றவும், நச்சுக்களை நீக்கவும் உதவும். அதே சமயம் உடலுக்கு அதிக ஆற்றலை அளிக்க உதவும். இது உங்கள் உடல் கொழுப்பைக் குறைக்கும், எடையைக் குறைக்கவும், தொப்பையைக் குறைக்கவும் உதவும். இந்த பானத்தை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ