உடல் பருமனால் வரும் ஏகப்பட்ட நோய்கள்: உஷார் மக்களே

Obesity: அதிக எடையுடன் இருப்பது பல உடல்நல அபாயங்களை அதிகரிக்கிறது. உங்கள் உடல் பருமனை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், எந்தெந்த நோய்களுக்கு நீங்கள் ஆளாகக்கூடும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 28, 2022, 06:02 PM IST
  • உடல் பருமனால் பல நோய்கள் வரக்கூடும்.
  • அதிக எடையுடன் இருப்பது உயர் இரத்த அழுத்த பிரச்சனையுடன் தொடர்புடையது.
  • உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
உடல் பருமனால் வரும் ஏகப்பட்ட நோய்கள்: உஷார் மக்களே title=

உடல் பருமனால் ஆரோக்கியத்துக்கு வரும் ஆபத்துகள்: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது. மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற பழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. பலர் ஃபிட்டான உடல் வாகை பெற மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். பல வித முயற்சிகளை எடுத்தாலும், பலரால் உடல் பருமனை குறைக்க முடிவதில்லை. உடல் எடை தேவைக்கு அதிகமாக அதிகரித்தால், அது பல நோய்களையும் உடலில் வரவழைக்கிறது. 

ஆம்!! அதிக எடையுடன் இருப்பது பல உடல்நல அபாயங்களை அதிகரிக்கிறது. உங்கள் உடல் பருமனை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், எந்தெந்த நோய்களுக்கு நீங்கள் ஆளாகக்கூடும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

உடல் பருமனால் இந்த நோய்கள் வரக்கூடும்: 

இருதய நோய்:

உடல் பருமன் உள்ளவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனெனில் இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் கொழுப்பு படிவுகள் குவிந்துவிடும். இதனால், உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வரக்கூடும். ஆகையால், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக அதை கட்டுப்படுத்த கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கணுமா? இந்த ஜூஸ் குடிச்சா போதும் 

பக்கவாதம்:

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மூளைக்கு ரத்தம் செல்லும் போது பக்கவாதம் வரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பக்கவாதம் மூளை திசுக்களை சேதப்படுத்தும். இதன் விளைவாக, உடலில் உள்ள பலவீனமான தசைகள், பேச்சு, கேட்கும் மற்றும் சிந்திக்கும் திறனில் பிரச்சினைகள் ஆகியவை ஏற்படலாம்.

உயர் இரத்த அழுத்தம்:

அதிக எடையுடன் இருப்பதும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையுடன் தொடர்புடையது. உடலில் இருக்கும் கொழுப்பு திசுக்களுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இதன் காரணமாக உங்கள் இரத்த நாளங்கள் கூடுதல் கொழுப்பு திசுக்களில் கூடுதல் இரத்தத்தை செலுத்த வேண்டும். இதனால் உங்கள் இதயத்தில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படக்கூடும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Heart Health: இதய நோய் அண்டாமல் இருக்க ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News