வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். மாவுச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது.
இதிலிருந்து செய்யப்பட்ட பீநட் பட்டர் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. புரோட்டின், நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு, பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடண்ட், மெக்னீசியம் நிறைந்துள்ளது. விட்டமின் ஏ டி பி12 போன்ற சத்துக்கள் உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
பீநட் பட்டர் நன்மைகள்:-
> பீநட் பட்டரில் நிறைவுற்ற கொழுப்பு இதயப்பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
> இதில் அளவுக்கதிகமான பொட்டாசியம் நிறைந்திருப்பதால், உடலில் ஏற்படும் சோடியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
> விட்டமின் ஏ டி பி12, கார்போஹைட்ரேட், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
> பீநட் பட்டர் கொழுப்பு நிறைந்தது என்ற கருத்து உள்ளது, ஆனால் இவற்றில் நிறைவுறாத கொழுப்புகளை (unsaturated fat) விட நிறைவுற்ற கொழுப்புகளே (saturated Fat) அதிகம்.
> 2 டேபுள் ஸ்பூன் பீநட் பட்டரில் 7 கிராம் புரோட்டின் உள்ளது, இதனை சாப்பிடுவதன் மூலம் தசைகளின் வளர்ச்சி மேம்படும்.