பைல்ஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்: பைல்ஸ் மிகவும் வேதனையான ஒரு நோயாகும். இந்தப் பிரச்னையைப் பற்றி வெளிப்படையாகப் பேச பலர் கூச்சப்படுவதால், பலரது நிலை இன்னும் மோசமாகிறது. பைல்ஸ் பிரச்சனை அதிகமானால், அதை சரி செய்ய சில சமயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. ஆகையால்தான், ஆரம்ப கட்டங்களிலேயே இந்த நோய்க்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இதனால் இந்த பிரச்சனை அதிகமாக தீவிரமடையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
பைல்ஸ் பிரச்சனை எந்த காரணங்களால் ஏற்படுகின்றது என்பதை இந்த பதிவில் காணலாம்.
பைல்ஸ் இரண்டு வகைப்படும். ஒன்று மலக்குடலின் உள்ளே உருவாகும் உள் மூல நோய், மற்றொன்று வெளியில் அதாவது மலக்குடலைச் சுற்றியுள்ள தோலின் கீழ் உருவாகும் வெளிப்புற மூல நோய். இவை இரண்டும் நோயாளிக்கு இரத்தப்போக்கை ஏற்படுத்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.
மேலும் படிக்க | பைல்ஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லிடுங்க
பைல்ஸ் வருவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?
வயிறு சுத்தமாக இல்லையென்றால், ஒருவருக்கு பைல்ஸ் பிரச்சனை வரக்கூடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது தவிர, காரமான உணவுகள், மிளகாய், மசாலா அல்லது சூடான உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை ஏற்படுத்தலாம். இது இரத்தம் வெளிவரும் பைல்ஸ் நோயை உண்டாக்கும். குறைவாக தண்ணீர் குடிப்பது, அதிக நேரம் அமர்ந்திருப்பது போன்றவற்றாலும் பைல்ஸ் பிரச்னை ஏற்படும்.இதனுடன் சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பைல்ஸ் வரலாம். கனமான பொருட்களை தூக்குவதாலும் பைல்ஸ் பிரச்சனை ஏற்படக்கூடும்.
மூலநோய்க்கான வைத்தியம்
பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பாகற்காயை உட்கொள்ளலாம். இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாகற்காய் நாள்பட்ட மலச்சிக்கலை குணப்படுத்தும். பாகற்காய் சாறு 50 முதல் 100 மில்லி வரை உட்கொள்வது வயிற்றிலுள்ள புழுக்களை நீக்குகிறது. பாகற்காய் மூலநோய் சிகிச்சையில் பெரிய அளவில் உதவுகின்றது.
பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற மற்ற சில உணவுகளின் பட்டியல் இதோ:
பருப்பு வகைகள், ப்ரோக்கோலி மற்றும் பிற க்ரீசிஃபெரஸ் காய்கறிகள், கேரட் மற்றும் உளைக்கிழங்கு போன்ற வேர் காய்கறிகள், மிளகு, கீரை, வெள்ளரி
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மூலநோய் உள்ளவர்கள் பால் அருந்தலாமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ