இன்றைய காலகட்டத்தில், உடல் உழைப்பு இல்லாத நிலை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை கொடுத்த பரிசுகளில் ஒன்று உடல் பருமன். தொப்பை மற்றும் உடல் பருமன், நமது தோற்றம் மற்றும் ஆளுமையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பல உடல்நல பிரச்சனைகளையும் உண்டாக்கும். அதோடு, ஃபிட்டான உடலைப் பெறவே பொதுவக அனைவரும் விரும்புவார்கள்.
உடல் பருமன் தொப்பை மற்றும் தொடை கொழுப்பைக் குறைக்க பலர் ஜிம், உணவுக் கட்டுப்பாடு மற்றும் விலையுயர்ந்த சப்ளிமெண்ட்ஸ் போன்றவற்றை நாடினாலும், அதனுடன் கூடவே சில வீட்டு வைத்தியங்களையும் முயற்சித்தால், பலனை விரைவாக பெறலாம். ஆயுர்வேதத்தில், எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் எடை குறைக்க உதவும் சில எளிய தீர்வுகள் உள்ளன. அதில் மஞ்சள் கிழங்கு, கருமிளகு நீர் பற்றி அறிந்து கொள்ளலாம். தொப்பை மற்றும் தொடை கொழுப்பை அகற்றும் ஆற்றல் கொண்ட நீர் (Weight Loss Drink) தயாரிக்கும் முறையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் அறிந்து கொள்ளலாம்.
கொழுப்பு இழப்பை கரைக்கும் ஆற்றல் கொண்ட மஞ்சள் கிழங்கு
மஞ்சள் அற்புதமான பலன்கள் கொண்டது. அதிலும் மஞ்சள் கிழங்கு பல நோய்களுக்கு மருந்தாகிறது. அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் கொழுப்பை எரிக்கும் பண்புகள் மஞ்சள் கிழங்கில் காணப்படுகின்றன. இதில் உள்ள குர்குமின் எனப்படும் ஒரு தனிமம் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இதன் காரணமாக உடலில் படிந்துள்ள கொழுப்பு வேகமாக உருகும்.
தொப்பையை கரைக்கும் ஆற்றல் கொண்ட கருமிளகு
10 மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம் என்பார்கள். அந்த அளவிற்கு கருமிளகில் மருத்துவ பண்புகள் கொட்டிக் கிடக்கின்றன. கருமிளகில் உள்ள பைபரின் என்ற கலவை, மஞ்சளில் உள்ள குர்குமினை உடல் சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தவும், கூடுதல் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
தொப்பை கொழுப்பை கரைக்கும் வீட்டு வைத்தியம்
மஞ்சள் கிழங்கு மற்றும் கருப்பு மிளகு கொண்டு தயாரிக்கப்படும் எடை இழப்பு பானம். ஒரு எளிய மற்றும் பயனுள்ள ஆயுர்வேத தீர்வு.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பு பிரச்னையாக இருக்கிறதா? அப்போ இந்த 4 விஷயங்களை செய்யாதீங்க!
எடை இழப்பு பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி துருவிய அல்லது அரைத்த மஞ்சள் கிழங்கு
1/2 தேக்கரண்டி கருமிளகு தூள்
1 தேக்கரண்டி தேன்
1 கிளாஸ் நீர்
1. முதலில், பசுமஞ்சள் மற்றும் கருமிளகு தூள் கலக்கி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
2. பின்னர் சிறிது ஆறியதும்அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. இந்த கலவையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
மஞ்சள் மருத்துவ குணங்கள் நிறைந்தது என்றாலும் அளவிற்கு அதிகமாக உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பச்சை மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு கலந்த வெயிட் லாஸ் டிரிங்க், எடை இழப்புக்கு உதவியாக இருக்கும் என்றாலும், அது மட்டுமே போதாது. கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்ட, இந்த வெயிட் லாஸ் பானத்தை தவறாமல் பயன்படுத்தி வரும் அதே நேரத்தில், அதனுடன் ஆரோக்கியமான உணவும், லேசான உடற்பயிற்சியும் உங்கள் வழக்கத்தில் சேர்க்கப்பட்டால், விரைவில் வித்தியாசத்தை உணர முடியும். இருப்பினும், இந்த உடல் எடை குறைவது என்பது, வாழ்க்கை முறை, உடல் வாகு மற்றும் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது.
தொப்பையை குறைக்க கடைபிடிக்க வேண்டியவை
1. நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
2. தினமும் 30 நிமிடங்கள் கார்டியோ அல்லது யோகா பயிற்சி செய்யுங்கள்.
3. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை தவறாமல் டயட்டில் சேர்த்தல்.
4. பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி டு ஈட் வகை உணவுகள், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... ABC ஜூஸ் செய்யும் மாயங்கள் பல
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ