நரம்பு மண்டலத்தை சீர்குலைக்கும் வைட்டமின் பி12 குறைபாடு... அறிகுறிகளும்... தீர்வுகளும்

Vitamin B12 Deficiency Symptoms: நம் உடலின் சீரான செயல்பாட்டிற்கு  அத்தியாவசியமான ஊட்டசத்துக்களில் ஒன்று வைட்டமின் பி12. இதன் முறைபாடு காரணமாக, நரம்பு மண்டல் பாதிப்பு உட்பட, பல தீவிர ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 3, 2024, 04:02 PM IST
  • வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்
  • வைட்டமின் பி12 குறைபாட்டை எவ்வாறு சரி செய்வது?
  • வைட்டமின் பி12 குறைபாட்டை போக்கும் உணவுகள்.
நரம்பு மண்டலத்தை சீர்குலைக்கும் வைட்டமின் பி12 குறைபாடு... அறிகுறிகளும்... தீர்வுகளும் title=

நம் உடலின் சீரான செயல்பாட்டிற்கு  அத்தியாவசியமான ஊட்டசத்துக்களில் ஒன்று வைட்டமின் பி12. இதன் முறைபாடு காரணமாக, நரம்பு மண்டல் பாதிப்பு, மூளை ஆரோக்கிய பாதிப்பு உட்பட, பல தீவிர ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். நம் உடலை கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலம் பலவீனமடைந்தால், அனைத்து விதமான உடல் நல பிரச்சனைகளும் ஏற்படும். 

உடலில் வைட்டமின் பி12  குறைபாடு இருந்தால், ​​உடலில் போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாமல் போகும். ஏனெனில், சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உடலுக்கு வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இரத்த சிவப்பணுக்கள் உங்கள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. இரத்த சிவப்பணுக்கள் இல்லாவிட்டால், உங்கள் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல், உங்கள் உடல் சரியாக செயல்பட முடியாது. 

வைட்டமின் பி12 ஊட்டச்சத்து மருத்துவ மொழியில், சயனோகோபாலமின் என அழைக்கப்படுகிறது. இந்த வைட்டமினை உடல் உற்பத்தி செய்யாது என்பதால், டயட்டின் மூலம் தான் இந்த ஊட்டச்சத்தை நாம் பெற முடியும். இந்நிலையில், வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறிகளையும், அதனை தடுக்க டயட்டில் சேர்க்க  வேண்டிய உணவுகளையும் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்

அடிக்கடி ஏற்படும் தலைவலி: வைட்டமின் பி-12 குறைபாடு காரணமாக அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் இரத்த சிவப்பணுக்களின் குறைபாடு இருந்தால், அது சோர்வை அதிகரிக்கிறது . அதோடு இதயத் துடிப்பும் அதிகரிக்கிறது, இதன் காரணமாக அடிக்கடி  தலைவலியை உணரலாம். 

பசியின்மை: பசியின்மை வைட்டமின் பி-12 குறைபாட்டின் தீவிர அறிகுறியாகும். இதனால், செரிமான செயல்முறை பாதிக்கபப்டுவதோடு,  பல ஹார்மோன்கள் அளவும் பாதிக்கின்றன. இது தவிர வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை அவ்வப்போது உணரலாம்.

நினைவாற்றல் பாதிப்பு: வைட்டமின் பி12 குறைபாடு நரம்ப மண்டத்தை பாதிப்பதால், கவனம் செலுத்துவதில் சிக்கல், எந்த வித காரணமும்  ஞாபக மறதி,கால்களில் உணர்வின்மை   ஆகியவை ஏற்படலாம்.

தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வு: தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வு ஆகியவை வைட்டமின் பி-12 குறைபாட்டின் தீவிர அறிகுறிகளில் ஒன்றாகும். இந்த வைட்டமின் குறைபாட்டால், உடலில் ரத்தமோ, சக்தியோ இல்லாத நிலையில், ஆழ்ந்த தூக்கம் இல்லமால் போகிறது. இதனால்  மன அழுத்தம்  மற்றும் மனச்சோர்வு அதிகரிக்கும்.

எனவே, மேலே குறிப்பிட்டுள்ள இந்த அறிகுறிகள் இருந்தால், அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். மருத்துவரிடம் சென்று கலந்தாலோசியுங்கள்.  பரிசோதனை மூலம் உங்கள் உடலில் குறைபாடு உள்ளதா என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

வைட்டமின் பி12 ஊட்டச்சத்து நிறைந்த சில உணவுகள்

காளான்கள், ப்ரோக்கோலி, பால், தயிர், சோயா பால், முட்டை, மீன் உணவுகள் ஆகியவற்றில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. இவற்றை தவறாமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

 

Trending News