கொரோனா தாண்டவம் மீண்டும் ஆரம்பம்.. கனடாவில் அடிக்கிறது இரண்டாவது அலை ..!!!

கனடா பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ (Canadian Prime Minister Justin Trudeau), கொரோனா வைரஸ் இரண்டாவது  அலை தொடங்கியுள்ளதாகவும், மீண்டும் தேசிய அளவில் லாக்டவுன் அறிவிக்கப்படலாம் எனவும் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2020, 04:28 PM IST
  • ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 300 என்ற அளவில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் பரவல் இப்போது நாள் ஒன்றுக்கு 1,248 என்ற அளவில் திடீரென திடீரென அதிகரித்துள்ளது.
  • கனடாவில் ஒரு தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அந்நாட்டு பிரதமர் கூறினார்.
கொரோனா தாண்டவம் மீண்டும் ஆரம்பம்.. கனடாவில் அடிக்கிறது இரண்டாவது அலை ..!!! title=

ஒட்டாவா (Ottawa): கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் ஆகிய நான்கு பெரிய மாகாணங்களில், ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தொடங்கி விட்டதாகவும்  வரும் காலம், நிலைமை மிகவும் மோசமடையலாம் எனவும்,  தேசிய தொலைக்காட்சி ஒன்றில் உரை நிகழ்த்திய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.  மீண்டும் தேசிய அளவில் லாக்டவுன் அறிவிக்கப்படலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 300 என்ற அளவில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் பரவல் இப்போது நாள் ஒன்றுக்கு 1,248 என்ற அளவில் திடீரென  திடீரென அதிகரித்துள்ளது.

கனடாவில் ஒரு தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். கனடாவில் கொரோனா ஏற்கனவே 145,000 க்கும் அதிகமான மக்களைப் பாதிக்கபப்ட்டனர். அந்நாட்டில் கொரோனாவினால் 9,242 பேரின் உயிர் பறிபோனது.

இந்த இரண்டாவது அலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஆற்றல் நமக்கு உள்ளது. ஏனென்றால் முன்பே நாம் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளோம் என கனாடா பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

கனடா மக்கள்  மீண்டும் பொது இடத்திற்கு செல்லும் போது முகமூடி அணிய வேண்டும் என்றும், சமூக இடவெளியை கடைபிடித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பிரமதமர் மேலும் கூறினார். கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு ஏற்கனவே  அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | பல்லை சுத்தம் பண்ணினா போதாது, வயிற்றையும் சுத்தம் பண்ணனும்னு நினைச்சிருப்பாரோ..!!!!

கனடா மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருந்து, அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறினார்.

தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் தனது அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளதாகவும் ட்ரூடோ கூறினார்.

COVID-19 தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் கையுறைகள், முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளின் கடுமையான பற்றாக்குறையை கனடா எதிர்கொண்டது.

பிரதமர் தனது உரையில், 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ஊதிய மானிய திட்டத்தை அடுத்த கோடை வரை நீட்டிப்பதற்கும், நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய வேலைவாய்ப்பிற்காக பயிற்சித் திட்டத்தைத் தொடங்குவதற்கும், வேலை செய்யும் பெண்களுக்கான நல திட்டங்களை தொடங்குவதற்கும் அரசாங்கம் உறுதியளித்தது.

மேலும் படிக்க | பிரிவினையில் தொலைந்தவரின் கண்ணீர் வாழ்வு....WhatsApp அழைப்பால் இணைந்தது உறவு..!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News