Super Drink For Weight Loss: சூப்பர்ஃபுட் என அண்மையில் பிரபலமடைந்துள்ள க்ரீன் காஃபியின் ஆரோக்கிய நன்மைகளில், கொழுப்பை விரைவில் குறைத்ஹ்டு உடல் பருமனை நிவர்த்தி செய்யும் பண்பு அனைவராலும் குறிப்பிட்டு கூறப்படுகிறது. வறுக்கப்படாத காபி பீன்களின் ரசாயன கலவையிலிருந்து உருவாகும் க்ரீன் காஃபி, என்பது வறுக்கப்படாத காபி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. க்ரீன் காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலங்கள் (CGAs) அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது, அவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்று நம்பப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாக இருப்பது கூடுதல் நன்மை ஆகும்.
அதிலும் குறிப்பாக இதில் உள்ள காஃபியோயில்குனிக் அமிலம் எனப்படும் சிஜிஏ, செரிமான அமைப்பில் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட்டு, இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது என்பதும் கொழுப்பு திரட்சியை குறைப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், க்ரீன் காபி குடிப்பவர்களுக்கு, உடல் கொழுப்பு மற்றும் சர்க்கரை குறைந்து ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் எடை இழப்பு துரிதப்படுத்தப்படுகிறது.
பொதுவாகவே காபிக்கொட்டைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பவை என்றாலும், வறுக்கும் செயல்முறையானது காபிக் கொட்டைகளில் உள்ள வேதியியல் கட்டமைப்பை மாற்றுகிறது, இதன் விளைவாக குளோரோஜெனிக் அமிலத்தின் உள்ளடக்கம் குறைகிறது.
எனவே, நாம் வழக்கமாக குடிக்கும் காபியில் நன்மை பயக்கும் சேர்மங்களின் அளவு குறைந்துவிடுகிறது, ஆனால் காபிக்கொட்டையை வறுத்தெடுப்பது அதன் நறுமணத்தையும் சுவையையும் மேம்படுத்துகிறது என்பதும் உண்மை தான்.
வறுக்கப்படாத காபி பீன்களில் குறைந்த அளவு காஃபின் உள்ளது. இதனால், காஃபின் உணர்திறன் உள்ளவர்களுக்கும் க்ரீன் காபி நல்லது. அதுமட்டுமல்ல, குளோரோஜெனிக் அமிலங்களை உடலுக்கு சேர்க்க க்ரீன் காஃபி நல்ல வழியாகும்.
மேலும் படிக்க | சருமத்தில் பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம்
Green-coffee-gfx ஆய்வுகள்
க்ரீன் காபியின் சாத்தியமான நன்மைகள், குறிப்பாக உடல் பருமன் தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குளோரோஜெனிக் அமிலங்கள் கொழுப்பு உறிஞ்சுதலைக் குறைப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி மூலம் எடை இழப்புக்கு உதவக்கூடும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
Journal of Evidence-Based Complementary and Alternative Medicine என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட மெட்டா பகுப்பாய்வு பல்வேறு சோதனைகளின் தரவுகளை சேகரித்து செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவை வெளியிட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின்படி, க்ரீன் காபி குடிப்பது எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று முடிவு செய்தது. குளோரோஜெனிக் அமிலத்தின் உள்ளடக்கம் உடல் நிறை குறியீட்டெண் (body mass index (BMI)) மற்றும் உடல் எடையைக் குறைக்க பங்களிக்கக்கூடும் என்று கூறுகிறது.
மேலும், க்ரீன் காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதிலுள்ள குளோரோஜெனிக் அமிலங்கள் (CGAs)chlorogenic acids),இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. வாஸ்குலர் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், இருதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் அவற்றின் ஆற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானமாக க்ரீன் காஃபி இருக்கிறது.
மேலும் படிக்க | இஞ்சிக்கு மிஞ்சியது எதுவும் இல்லை! யாரெல்லாம் இஞ்சியை அதிகமா சாப்பிடக்கூடாது?
க்ரீன் காஃபிக்கும் சாதாரண காபிக்கும் உள்ள வேறுபாடும் ஒற்றுமையும்
வறுத்த காஃபி ஆக்ஸிஜனேற்றப்பட்டது மற்றும் பச்சை நிறமாக இருக்காது. இரண்டிலும் பாலிஃபீனால்கள் உள்ளன, அவை வலுவான ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்டிருக்கின்றன, இது உங்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். வறுத்த மற்றும் வறுக்காத காஃபி இரண்டுமே காஃபின் மற்றும் எல்-தியானைனைக் கொண்டுள்ளன. இவை மன அழுத்தத்தை குறைக்கின்றன.
க்ரீன் காபி பாதுகாப்பானது என்பதும், கர்பிணிகளும் பருகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பலவீனமான எலும்புகள் மற்றும் தூக்கமின்மை, கவலை என சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், க்ரீன் காபியை தவிர்ப்பது நல்லது. ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைக் குறைக்கும் என்பதால், சாப்பிட்ட உடனேயே க்ரீன் காபி குடிப்பதைத் தவிர்க்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கன்னாபின்னானு எடை ஏறுதா? காலை உணவில் இதை சாப்பிடுங்க... வேகமா குறக்கலாம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ