Benefits of Eating Almonds: முன்னர் இருந்ததை விட இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். உடல் நலனில் அக்கறை உள்ளவர்கள், தங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டு செயல்படுகிறார்கள். இதற்காக சில குறிப்பிட்ட உணவுகளையும் கூடுதலாக உட்கொள்கிறார்கள்.
அப்படி சமீப காலங்களில் அதிகரித்துள்ள பழக்கம் தான் உலர் பழங்களை உட்கொள்வது. உலர் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது. உலர் பழங்களில் பாதாம் பலருக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது. இதை நாம் அப்படியே அல்லது ஊற வைத்து உட்கொள்கிறோம். தினமும் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை சாப்பிட்டால், அது நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மைகளை அளிக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் இதைப் பற்றி நமக்கு கூறுகிறார்.
தினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சத்துக்களுக்கு பஞ்சம் இருக்காது
பாதாம் 'சூப்பர்ஃபுட்' என்று அழைக்கப்படுகிறது. பாதாம் சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. ஏனெனில் அவற்றில் வைட்டமின் ஈ, ஃபோலேட், நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். கூடுதலாக, பாதாமில் மோனோசாக்கரைடுகள் உள்ளன. இவை இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகின்றது.
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால் இந்த அறிகுறிகள் தோன்றும்: உஷார் மக்களே
மூளை கூர்மையாக இருக்கும்
பாதாம் பருப்பை சிறிதளவு எடுத்து தினமும் உட்கொண்டு வந்தால், அது மூளையை வலிமையாக்கும். ஏனெனில் இதில் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும் கூறுகள் உள்ளன. இதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். இதனால் உங்கள் சிந்தனைத் திறன் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.
ஆற்றல் அதிகரிக்கும்
நாள் முழுவதும் உழைப்பவர்கள், தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள முடியாதவர்கள் தினமும் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை அளித்து ஆற்றலை அதிகரிக்கிறது. இது உடல் சோர்வையும் குறைக்கின்றது.
இதில் கவனம் தேவை
பாதாம் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும், இதை அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பாதாமில் உள்ள கொழுப்பு உடல் பருமனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோடைக்காலத்தில் அதிகமாகச் சாப்பிட்டால் பாதிப்புகள் ஏற்படும். ஏனெனில் இது உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும். தினமும் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை மட்டுமே சாப்பிடுவது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ