நோய்கள், தொற்றுகள்...அனைத்தையும் சொல்லி அடிக்கும் நெல்லிக்காய்: ஆரோக்கிய நன்மைகள் இதோ

Health Benefits of Eating Amla: நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 18, 2024, 04:37 PM IST
  • செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்.
  • கண்பார்வை மேம்படும்.
  • கூந்தல் பராமரிப்பில் இது உதவும்.
நோய்கள், தொற்றுகள்...அனைத்தையும் சொல்லி அடிக்கும் நெல்லிக்காய்: ஆரோக்கிய நன்மைகள் இதோ title=

Health Benefits of Eating Amla: நாம் தினமும் உட்கொள்ளும் காய்கள் மற்றும் பழங்கள் மூலமாகவே நமது உடல் ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்கலாம். இவை நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல வித நோய்கள் மற்றும் தொற்றுகளிலிருந்து நம்மை காக்கின்றன. பருவகால பழங்கள் மற்றும் காய்களை நமது டயட்டில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். 

உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் பழங்களில் முக்கியமான ஒரு பழமாக இருக்கும் நெல்லிக்காயை பற்றியும், அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

நெல்லிக்காய்: வைட்டமின் சி -யின் பவர்ஹவுஸ்

நெல்லிக்காய் வைட்டமின் சி-இன் பவர் ஹவுஸாக கருதப்படுகின்றது. இது புளிப்பு சுவை கொண்ட பழமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல வித சத்துக்களின் பொக்கிஷமாகவும் உள்ளது. நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். 

ஆரோக்கிய நன்மைகளின் பொக்கிஷமாக கருதப்படும் நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் 5 அற்புதமான நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (Immunity)

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற சிறிய பிரச்சனைகளிலிருந்தும், பல பெரிய தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்தும் நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். இதுமட்டுமின்றி, உடலில் ஏற்படும் காயங்கள் விரைவாக குணமாகவும் இது உதவுகிறது.

செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும் (Digestion)

நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலின் செரிமாத்தை சீராக்க உதவுகிறது. தினமும் நெல்லிக்காய் உட்கொண்டால் சரியான செரிமானத்தை பராமரிக்கலாம். இதன் மூலம், உடல் உப்பசம், மலச்சிக்கல், அமிலத்தன்மை ஆகிய பிரச்சனைகள் குணமாகி வயிறு சுத்தமாகும். 

கண்பார்வை மேம்படும் (Eye Care)

நெல்லிக்காயில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ கண்களுக்கு மிக முக்கியமான வைட்டமினாக பார்க்கப்படுகின்றது. தினமும் நெல்லிக்காய் உட்கொள்வதால் கண்பார்வை மேம்படுகிறது. இதுமட்டுமின்றி கண்புரை போன்ற பிரச்சனைகளின் அபாயத்தையும் இது குறைக்கிறது.

மேலும் படிக்க | கழுத்து வலியை கண்டவுடன் விரட்டும் 6 யோகாசனங்கள்! வீட்டிலேயே செய்யலாம்..

கூந்தல் பராமரிப்பில் இது உதவும் (Hair Care)

நெல்லிக்காயும் கூந்தலின் ஆரோக்கியத்திலும் நன்மை பயக்கும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கூந்தலுக்கு ஊட்டமளித்து, அவை உதிராமல் தடுக்கின்றன. இது கூந்தலை அடர்த்தியாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

எடை இழப்பு (Weight Loss)

உடல் பருமன் அதிகமாக இருந்து, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு நெல்லிக்காய் உதவியாக இருக்கும். இது கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. மேலும், இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு நீண்ட நேரத்திற்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. இதன் காரணமாக நாம் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இந்த வகையில் நெல்லிக்காய் எடை குறைக்க உதவுகிறது. 

நெல்லிக்காயை உட்கொள்ள சிறந்த வழி என்ன?

- நெல்லிக்காயை பல வழிகளில் உட்கொள்ளலாம். 

- இதை பச்சையாகவும் உட்கொள்ளலாம். 

- நெல்லிக்காய் சாறு குடிப்பதும் உடலுக்கு நன்மை பயக்கும்.

- சிலர் வெல்லம் சேர்த்து இதை சட்னியாகவும் செய்வார்கள்.

- இதை வேகவைத்து அரைத்து, தயிருடன் கலந்து தயிர் பச்சடியாகவும் உட்கொள்ளலாம். 

- நெல்லிகாய் ஊறுகாய் பலருக்கு விருப்பமான ஒரு ரெசிபியாக உள்ளது. 

- எனினு,ம். அதிகபட்ச நன்மைகளை பெற, நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடுவதே நல்லது என கூறப்படுகின்றது. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கர்ப்பிணிப் பெண்களை அச்சுறுத்தும் டெங்கு: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News