Side Effects of Obesity in Men: உடல் பருமன் இந்த நாட்களில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. உடல் பருமனால் பெண்களை விட ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகரித்து, உடல் எடை அதிகரித்து பல பிரச்சனைகளுக்கு நாம் ஆளாக நேரிடுகின்றது. ஆண்களின் உடல் பருமன் மிகவும் ஆபத்தானது.
ஆண்களுக்கு வயிற்று கொழுப்பு அதிகமானால், அதன் காரணமாக, பல தீவிர நோய்கள் அவர்களை ஆட்கொள்ளத் தொடங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.8 மில்லியன் மக்கள் அதிக எடை அல்லது உடல் பருமனால் ஏற்படும் நோய்களால் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ஆண்களில் பலர் உடல் பருமன் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு உடல் பருமனால் ஏற்படக்கூடிய 5 நோய்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கீல்வாதம் (Osteoarthritis)
உடல் பருமனுடன் சேர்ந்து அதிகமாகும் தொப்பை கொழுப்பு ஆண்களுக்கு எலும்பு நோய்கள் ஏற்பட காரணமாகின்றது. உடல் பருமனாக உள்ள பல ஆண்கள், கைகள் மற்றும் கால்களின் எலும்புகளில் வலியால் சிரமப்படுகிறார்கள். சில ஆண்களுக்கு முழங்கால் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் இருக்கும். உடல் பருமனால் கீல்வாதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
நீரிழிவு நோய் (Diabetes)
உடல் பருமனால் பாதிக்கப்பட்ட பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில், உடல் பருமன் காரணமாக, 27 சதவீத ஆண்களுக்கு நீரிழிவு நோய் வரும் அபாயம் உள்ளது. உடல் உப்பசத்தால், உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. எடையைக் குறைப்பதால், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம்.
இதய நோய்கள் (Heart Diseases)
சமீப காலங்களில் இதய நோய்களுக்கான அபாயம் அதிகரித்து வருகிறது. மாரடைப்பு போன்ற அபாயகரமான இதய நோய்கள் ஆண்களுக்கு உடல் பருமனால் ஏற்படலாம். 40க்கு மேல் பிஎம்ஐ உள்ள ஆண்களுக்கு இதய நோய் மிகவும் பொதுவானது. இருப்பினும், இவை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகையால், எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure)
ஆண்களில் உடல் எடை அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்த அபாயம் ஏற்படும் சாத்தியமும் அதிகரிக்கிறது. வயிறு வளரும் போது, ஆண்களின் இதயத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளாசியா (Benign Prostatic Hyperplasia)
ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று, பெரிதாகும் புரோஸ்டேட். இது தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளேசியா மற்றும் பிபிஹெச் என்றும் அழைக்கப்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் புரோஸ்டேட் விரிவாக்கம் பற்றிய புகார்கள் வருவது இந்த நாட்களில் சகஜமாகி விட்டது. 51 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்களில் 50 சதவீதத்தினருக்கும், 80 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 90 சதவீதத்தினருக்கும் இந்நிலை காணப்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், உடல் பருமன் ஆண்களில் புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளேசியாவின் அபாயத்தை அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை... எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் டீ... ஓவரா குடிப்பது மிக ஆபத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ