நுரையீரல் புற்றுநோயை 5 நொடிகளில் கண்டறிய உதவும்... வைர விரல் சோதனை

நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணம், நோயறிதலில் ஏற்படும் தாமதம் ஆகும். இதன் காரணமாக சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 28, 2024, 04:12 PM IST
  • நுரையீரல் புற்றுநோயை அடையாளம் காண உதவும் சில அறிகுறிகள்.
  • புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் ஆபத்துகள்.
  • நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை
நுரையீரல் புற்றுநோயை 5 நொடிகளில் கண்டறிய உதவும்...  வைர விரல் சோதனை title=

நுரையீரல் புற்றுநோய் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது என உலக சுகாதார அறிக்கை கூறுகிறது. 2020 ஆம் ஆண்டில், நுரையீரல் புற்றுநோய் புதிதாக 2,206,771 பாதிப்புகள் கண்டறியப்பட்டதை அடுத்து உலகளவில் இரண்டாவது பொதுவான புற்றுநோயாகும் என்று தி லான்செட் தெரிவித்துள்ளது. நுரையீரலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி காரணமாக புற்றுநோய் ஏற்படுகிறது.  நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடித்தல் தான் முக்கிய காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நீண்ட காலம் புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது எனவும் எச்சரிக்கின்றன.

நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணம், நோயறிதலில் ஏற்படும் தாமதம் ஆகும். இதன் காரணமாக சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நுரையீரல் புற்றுநோய் ஆபத்தில் உள்ளீர்களா இல்லையா என்பதை அறிய வைர விரல் சோதனை செய்யலாம். இந்த சோதனை எளிமையானது மட்டுமல்ல, வீட்டிலேயே எளிதாகவும் செய்யலாம்.

வைர விரல் சோதனை என்றால் என்ன?

இந்த சோதனையில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்றாக இணைக்க வேண்டும். 5 வினாடி அப்படியே இருக்கவும். இந்நிலையில் அவற்றுக்கிடையே ஒரு டயமண்ட் வடிவம் உருவாக வேண்டும். அப்படி இல்லையென்றால், அதாவது உங்கள் விரல்களுக்கு இடையில் இடைவெளி இல்லை என்றால், அது விரல் கிளப்பிங் என்பதைக் குறிக்கலாம். அதாவது இது நுரையீரல் புற்றுநோயின் சாத்தியத்தை குறிக்கிறது. இந்த நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 35% க்கும் அதிகமானவர்களில் காணப்படுகிறது என கேன்சர் ரிசர்ச் UK கூறியுள்ளது. கிளப்பிங் என்பது நுரையீரல், இதயம் அல்லது செரிமான அமைப்பில் உள்ள பிரச்சனைகளைக் குறிக்கலாம்.

நுரையீரல் புற்றுநோயை அடையாளம் காண உதவும் சில அறிகுறிகள்

நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் 3 வாரங்களுக்கு மேல் நீங்காத இருமல், மார்பில் தொற்று, இருமலின் போது இரத்தம், மூச்சுத் திணறல் மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும். இது தவிர, முகம் மற்றும் கழுத்தில் வீக்கம், மூச்சுத்திணறல் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் ஆகியவையும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இடைவெளி இல்லாத விரல்கள் உங்கள் இதயம் அல்லது நுரையீரலில் உள்ள பிரச்சனையைக் குறிக்கின்றன. விரலின் நுனி பகுதியில் உள்ள மென்மையான திசுக்களில் திரவம் சேர்வதால் உங்கள் விரல்கள் வீங்கியிருக்க கூடும். இதனால் சிறிய வைர வடிவம் உருவாகாமல் போகலாம்.

மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க உதவும்... புரதம் நிறைந்த சில சூப்பர் உணவுகள்!

புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் ஆபத்துகள்

நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் புகைபிடித்தல், மாசுபாடு, அஸ்பெஸ்டாஸ் மற்றும் ரேடான் ஆகியவற்றின் வெளிப்பாடு ஆகும். இது தவிர, குடும்ப வரலாறு, எச்.ஐ.வி ஆகியவையும் இந்த நோய்க்கான ஆபத்து காரணிகளாகும்.

நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை

நுரையீரல் புற்றுநோயைத் தவிர்க்க, புகைபிடிப்பதை நிறுத்துவது அல்லது தவிர்ப்பது மிகவும் முக்கியம். கூடுதலாக, ஆரஞ்சு, வெல்லம், கேரட் போன்ற உணவுகள் நுரையீரல் புற்றுநோயின் வாய்ப்புகளை குறைக்கும். மேலும், மாசு காலத்தில் முகமூடி அணிவது நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | குழந்தை பெற முயற்சிக்கும் ஆண்கள் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News