கடும் பனிமூட்டம் காரணமாக, வட மாநிலத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் 14 விரைவு ரயில்கள் தாமதமாக ஒடுகின்றன என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கடும் குளிருடன் பனிமூட்டமும் நிலவுகிறது. இதனால் காட்சித் திறன் குறைந்து, டெல்லி நோக்கி வரும் ரயில்கள் சுமார் 6 மணி நேரம் வரை தாமதமாக ஓடுவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர். மேலும் இன்று அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதாலும், மற்றும் தண்டவாளம் சரியாக தெரியாத காரணத்தினாலும் ரயில்கள் வழக்கத்தைவிட மெதுவான வேகத்தில் இயங்கி வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 316 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள ஃபரீதாபாத் 282, குருகிராம் 246 ஆகிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதேசமயம் காஜியாபாத் 379, கிரேட்டா் நொய்டா 336, நொட்டா 344 ஆகிய நகரங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.
தலைநகா் டெல்லியில் இன்று அதிகாலையில் அடா் பனிமூட்டம் இருந்த நிலையில், சில இடங்களில் மழையும் பெய்தது. அதே சமயம் காற்றின் தரம் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிக்கிறது. மோசமான வானிலை காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வடமாநிலங்களில் நிலவும் மிகவும் மோசமான வானிலை காரணமாக 14 ரயில்கள் 3 மணி நேரம் வரையிலும் தாமதமாகச் சென்றதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, (செவ்வாய்க்கிழமை) இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.