பிப்ரவரி 10-ம் தேதி மோடி, பாலஸ்தீனம் செல்ல உள்ளார். பாலஸ்தீனம் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன் மூலம் பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை மோடி பெறுவார்.
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்கும் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துதி.இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாலஸ்தீனம் செல்வதன் மூலம் இரு இருநாடுகளிடையே நல்ல நட்புறவை ஏற்படும் என தெரிகிறது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். இதன் மூலம் இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.
தற்போது 6 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெகதாகு இந்தியா வந்துள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.