ஜார்கண்ட் மாநிலத்தில் ரேசன் அட்டையுடன் ஆதார் எண்னை இணைக்காததால் 11 வயது சிறுமி இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது!
ஜார்கண்ட் மாநிலத்தின் சிம்தேகா மாவட்டம் கரீமாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷி குமாரி. மிகவும் ஏழ்மையான நிலைமையில் இருக்கும் இவரது குடும்பம் ரேசன் பெருட்களை மட்டுமே ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றது.
இவரது குடம்ப அட்டையானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாததால் இவருக்கு ரேசன் பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பசியால் வாடிய அக்குடும்பத்தில் இருந்து சந்தோஷி குமாரி (உயிர்)பிரிந்துச் சென்றார்.
Jharkhand: Went to get rice but I was told that no ration will be given to me. My daughter died saying 'Bhat-bhat'-Koyli Devi, girl's mother pic.twitter.com/aRCIwcoSfL
— ANI (@ANI) October 17, 2017
இச்சம்பவம் குறித்து சந்தோஷி குமாரியின் தாயார் கூறுகையில்:-
கடந்த செப்டம்பர் 28 அன்று ரேசன் பொருட்களை வாங்கச் சென்றேன், ஆனால் எங்கள் குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப் படாதாதால் ரேசன் பொருட்கள் மறுக்கப்பட்டது. அன்நாளே என் மகளும் ’அரிசி அரிசி’ என்று ஏங்கியவாரே கூறி உயிர் இழந்தாள். தெரிவித்துள்ளார்!