புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தற்போது சிறையில் இருக்கும் நிலையில், டெல்லி அரசியலில் பரபரப்பான சூழல் உள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த முக்கிய கூட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் இருந்தாலும், தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ‘மே பி கெஜ்ரிவால்’ அதாவது 'நானும் கெஜ்ரிவால்' என்ற பிரச்சாரத்தைத் தொடங்க ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party) தீர்மானித்துள்ளது. டெல்லி மதுபான ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த முதல் பெரிய கூட்டத்திற்கு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் சந்தீப் பதக் தலைமை வகித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் நீடிப்பார் என்றும், காவலில் இருந்து அவர் கொடுக்கும் அறிவுறுத்தல்களை நிர்வாகமும் கட்சி உறுப்பினர்களும் பின்பற்றுவார்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘Main Bhi Kejriwal’ பிரச்சாரம்
‘Main Bhi Kejriwal’ பிர்ச்சாரம் உடனடியாக தொடங்கப்படும் என பதக் அறிவித்தார். குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் பொது விளம்பரங்கள் முலம் இந்த பிரச்சாரம் பற்றி மக்களுக்கு தெரிவிக்கப்படும் என அவர் கூறினார். மார்ச் 31-ம் தேதி நடைபெறும் இந்தியா பிளாக் பேரணியில் பங்கேற்பவர்கள் தங்கள் வாகனங்களில் ‘மெயின் பி கெஜ்ரிவால்’ ஸ்டிக்கர்களுடன் வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட எதிர்கட்சியான இந்தியா கூட்டணி மார்ச் 31 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் "மகா பேரணியை" நடத்த உள்ளது. அந்த தேதியில் பேரணியை ஏற்பாடு செய்ய கெஜ்ரிவாலிடம் இருந்து தனக்கு உத்தரவு வந்ததை பதக் உறுதிசெய்து, இதை கட்சி வெற்றிகரமாக நடத்தும் என்று உறுதியளித்தார்.
அனைத்து சட்டமன்றப் பகுதிகளிலும் மார்ச் 26 ஆம் தேதி ஆயத்தக் கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் அதிக மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. தோராயமாக 14,000 வாக்குச் சாவடிகளில் இருந்து தலா 10 நபர்கள் என ராம்லீலா மைதானத்தில் சுமார் 150,000 பேர் கொண்ட பேரணியை நடத்த திட்டமுள்ளாதாக தெரிய வந்துள்ளது. பேரணியின் போது கருப்பு ரிப்பன்களை அணியுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு பதக் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் படிக்க | இலவச LPG சிலிண்டர்... ஹோலி பண்டிகையை ஒட்டி இந்த மாநில மக்களுக்கு கிடைத்துள்ள பரிசு!
கெஜ்ரிவால் சிறையிலிருந்து ஆட்சி நடத்துவார்: ஆம் ஆத்மி கட்சி
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று அனைத்து தொண்டர்கள் சார்பாக கெஜ்ரிவாலுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், “சிறையில் இருந்து அரசாங்கம் நடக்கும்" என்று குறிப்பிட்டார்.
கெஜ்ரிவாலை கைது செய்து, அதன் மூலம் கட்சியை சிதைக்க பாஜக சதி செய்வதாக பதக் குற்றம் சாட்டினார். எனினும், கட்சியிலிருந்து யாரும் பிரிந்து செல்லப் போவதில்லை என்று அவர் உறுதியாகக் கூறினார். “உங்களுக்கு அவரை தெரியாது. வெளியே இருக்கும் கெஜ்ரிவாலை விட சிறையில் இருக்கும் கெஜ்ரிவால் மிக ஆபத்தானவர்" என்று அவர் பாஜகவை எச்சரித்தார்.
"இப்போது மன்றாட மாட்டோம், நேராக போர் தான்" என்று கூறிய அவர், "முன்பு, சிவில் லைன்ஸில் இருந்து உத்தரவுகளைப் பெற்றோம், இப்போது சிறையில் இருந்து உத்தரவுகளைப் பெறுவோம், அவற்றைப் பின்பற்றுவோம்." என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | உலகிலேயே இந்தியாவில் மிக மலிவான விமான கட்டணங்கள்: ஆகாசா ஏர் நிறுவனத்தின் CEO
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ