திருமணத்திற்கு முன் உடலுறவு தப்பில்லை... பிரபல நடிகை அதிரடி!

பெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும், அதே சமயம் பாதுகாப்பாக உறவு மேற்கொள்வது குறித்து ஊக்கப்படுத்த வேண்டும் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 1, 2019, 01:37 PM IST
திருமணத்திற்கு முன் உடலுறவு தப்பில்லை... பிரபல நடிகை அதிரடி! title=

பெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும், அதே சமயம் பாதுகாப்பாக உறவு மேற்கொள்வது குறித்து ஊக்கப்படுத்த வேண்டும் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே கான்க்ளேவில் பேசிய நடிகை தனது முதல் காதல் மற்றும் முதல் முத்தம் குறித்து வெளிப்படையாக பேசினார். அப்போது, தனது முதல் காதல் அனுபவத்தை அறிந்த தனது பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்ததாகவும், தற்போது உள்ள பெற்றோர்கள் இதனை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்., “எனது முதல் உறவு எனது 17-18 வயதில் துவங்கியது. நான் அப்போது சண்டிகரில் இருந்தேன். எனது தோழி ஒருவர் தனது நண்பருடன் உறவில் இருந்தார். நானும் நண்பர் ஒருவருடன் உறவில் இருக்க விரும்பினேன். அவர் ஒரு அழகான பஞ்சாபி பையன். அவருக்கு வயது 28, எனக்கு 16-17 இருக்கும். அவர் என்னைப் பார்த்தார், அவரது கண்ணிற்கு நான் ஒரு குழந்தை போல தெரிந்தேன் என்பது அவருடைய செயல்பாட்டில் புரிந்துக்கொண்டேன். நான் இந்த விளையாட்டிற்கு மிகவும் புதியவள் என்பதை அவர் கண்டறிந்தார். நான் மனம் உடைந்தேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், நான் வளருவேன், என்று அவருக்கு தெரியப்படுத்த ஏங்கினேன்”.. என்று கங்கனா தன் மனம் திறந்தார்.

தனது முதல் முத்தத்தைப் பற்றி பேசுகையில், கங்கனா சிரித்தபடி, “என்னால் அவரை முத்தமிட முடியவில்லை, அதனால் நான் என் உள்ளங்கையில் முத்தமிட்டு பயிற்சி செய்தேன். எனது முதல் முத்தம் மாயமானது அல்ல, அது குழப்பமாக இருந்தது. மேரா மு ஃப்ரீஸ் ஹோ கயா தா (என் வாய் உறைந்தது, என்னால் நகர முடியவில்லை). லட்கே நே போலா மு ஹிலாவ் தோ ஸாரா! (அவர் சொன்னார், உன் வாயை கொஞ்சம் அசை என!)” என்று வெளிப்படையாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர் தனது முதல் ஈர்ப்பு தன்னுடைய ஆசிரியர் மீது தான் என தெரிவித்தார். மேலும் தற்போதைய காலக்கட்டத்தில் திருமணத்திற்கு முன்பு பாலுறவு என்பது குற்றமாக பார்க்கப்படுகிறது, இந்த கண்ணோட்டம் மாற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய காலத்தில் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு, அவருடன் மட்டுமே நமது உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ளுதல் என்ற நடைமுறை இருந்தது. இந்த நடைமுறையால் தான் பல யுத்தங்கள் நடைப்பெற்றது. தற்போது இந்த முறைமை மாற்றப்பட வேண்டும். பெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும், அதே சமயம் பாதுகாப்பாக உறவு மேற்கொள்வது குறித்து ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Trending News