அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு!
ராம்ஜன்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த ஓர் தீர்மானத்திற்கு வருவதற்காக இன்று சந்தித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்வதாக முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கில், சர்ச்சைகுரிய நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கலாம் என்றும், முஸ்லிம்களுக்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு.
இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்வதா வேண்டாம் என்பது குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், இஸ்லாமியர்களுக்கென்று சேர வேண்டிய இடம் அவர்களுக்கு தான் வேண்டும் என்றும், வேறு பகுதியில் நிலம் வேண்டாம் என்பதால், உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ள 5 ஏக்கர் நிலம் தங்களுக்கு வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. இவர்களை தொடர்ந்து, இன்று சந்தித்த ஜமாய்த் உலாமா ஐ ஹிந்த் அமைப்பும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
The All India Muslim Personal Law Board (AIMPLB) has decided to file a review petition against the Supreme Court (SC) verdict on Ayodhya issue while declining to accept the five acres of land
Read @ANI Story |https://t.co/oHGVbMYdd9 pic.twitter.com/41JgbIEA98
— ANI Digital (@ani_digital) November 17, 2019
இந்தியாவின் புனிதத் தளமான அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலமான 2.77 ஏக்கர் எங்களுக்கு தான் சொந்தம் என இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கோரினார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி என்ற ஊரில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் பாபர் மசூதி, 1992 ஆம் ஆண்டு வலதுசாரி கும்பல்களால் இடிக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் ராமர் கடவுளுக்கு இந்துக்கள் கோவில் கட்டலாம் என்று இந்தியாவின் உயர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு நகரத்தில் 5 ஏக்கர் நிலத்தை தனித்தனியாக வழங்கவும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.