போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இத்கா ஹில்ஸ் பகுதியில் தண்ணீரை சுத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குளோரின் தொட்டியில் இருந்து சிறு வாயு கசிவு ஏற்பட்டதால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை அரசு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கண்களில் எரியும் உணர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாயுக்கசிவு தொடர்பாக தகவல் தெரிவித்த போபால் கலெக்டர் அவினாஷ் லாவானியா, எரிவாயு கசிவை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். “இக்கட்டான சூழ்நிலை எதுவும் இல்லை, சம்பவத்தில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சிலர் மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவர்களிடம் பேசினோம் கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளனர் ”என்று அவர் மாவட்ட ஆட்சியர் அவினாஷ் லாவானியா கூறினார்.
“சிலிண்டரின் காலாவதி தேதி தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. அது முழுமையாக செயல்பட்டது. குளோரின் சிலிண்டர் வைத்து வேலை செய்வதால், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.
"தண்ணீரில் குளோரின் அதிகமாக இருப்பதால் பிரச்சனை ஏற்பட்டது, இருப்பினும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நகராட்சி அதிகாரிகள் தண்ணீரில் குளோரின் அளவைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர். தொட்டியில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், மக்களுக்கு அரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நான்கைந்து பேர் ஹமிடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,” என்று லாவனியா மேலும் கூறினார்.
மேலும் படிக்க | சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரம்
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மாநில மருத்துவ கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை பார்வையிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகளையும் வழங்கினார்.
பின்னர், எரிவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களின் உடல்நிலை குறித்து நேரில் சென்று தெரிந்துக் கொள்வதற்காக, அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங், ஹமீடியா மருத்துவமனைக்குச் சென்றார்.
1984 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ஏற்பட்ட வாயுக்கசிவின் கோர சம்பவங்கள் இன்னும் உலகத்தின் கண்களில் பசுமையாக உள்ளது. எனவே, இன்றைய குளோரின் வாயு கசிவுச் சம்பவம் மக்கள் மத்தியில் பீதியைத் தூண்டியது,
அன்றைய தீங்கு விளைவிக்கும் வாயுக் கசிவு, பலரைக் கொன்றது மற்றும் ஆயிரக்கணக்கானோர் பல நோய்களால் பாதிக்கப்பட்டனர். 1984 டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து வாயு கசிந்த சம்பவம் உலகின் மிகப்பெரிய இரசாயன பேரழிவாக அறியப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ