நம் நாடு திருவிழாக்களும் பண்டிகைகளும் நிறைந்த நாடு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவற்றின் தனித்துவமான பண்டிகைகள் என பல உள்ளன. அவை கொண்டாடப்படும் விதங்களும் வேறுபடுகின்றன. அவ்வகையில், குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால் இவ்வாண்டு, அனைத்தையும் மாற்றியமைத்த கொரோனா தொற்று இதை மட்டும் விட்டு வைக்குமா என்ன? நவரத்திரியிலும் கொரொனாவின் கண் பட்டுவிட்டது.
குஜராத் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் COVID-19 தொற்றுக்கு இடையே, மாநிலத்தில் விஜய் ரூபானி (Vijay Rupani) தலைமையிலான அரசு இந்த ஆண்டு நவராத்திரி விழாக்களை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
"இந்த ஆண்டு நிலவும் COVID-19 தொற்று நிலைமை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு ஏற்பாடு செய்யும் ஒன்பது நாள் பாரம்பரிய மாநில அளவிலான நவராத்திரி திருவிழா, பொது நலன் கருதி கொண்டாடப்படாது" என்று முதல்வர் ரூபானியை மேற்கோளிட்டு ஒரு அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.
ALSO READ: COVID-19 Update: உலக அளவில் கொரோனா பாதிப்பு விபரம்
வழக்கமாக, இந்த விழா, நவராத்திரியில் (Navrathri) கொண்டாடப்படுகிறது. அதாவது இந்த ஆண்டு, அக்டோபர் 17 முதல் அக்டோபர் 25 வரை இந்த விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அகமதாபாத்தின் GMDC மைதானத்தில் மாநில அளவிலான கர்பா விழாவை துவக்கி வைத்தார். 2019 ஆம் ஆண்டில், பிரதமர் மோடி (PM Modi) விழாவில் பங்கேற்று GMDC மைதானத்தில் ‘ஆர்த்தி’ நிகழ்ச்சியையும் நிகழ்த்தியிருந்தார்.
இதற்கிடையில், குஜராத்தில் (Gujarat) சனிக்கிழமையன்று 1,419 பேர் புதிதாக COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் அங்கு மொத்த எண்ணிக்கை 1,31,808 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் COVID-19 காரணமாக மொத்த இறப்பு எண்ணிக்கை 3,409 ஆக உள்ளது.
குஜராத்தில் (Gujarat) சனிக்கிழமையன்று மொத்தம் 1,419 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் அங்கு மொத்தமாக இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,909 ஆக உள்ளது. குஜராத்தில் கோவிட் -19 தொற்றின் மீட்பு விகிதம் (Recovery Rate) 84.90 சதவீதமாகும். மாநிலத்தில் இப்போது 16,490 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
இது தொடர்பான வளர்ச்சியில், உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை, கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைப்பதற்குள், COVID-19 இன் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 2 மில்லியனாக இரு மடங்காக உயரக்கூடும் என்று கூறியது. இந்த கொடிய வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கூடும் என்றும் WHO எச்சரித்தது.
ALSO READ: Corona Virus Update: புதிய பாதிப்பு 85,362; மொத்த எண்ணிக்கை 59 லட்சத்தை தாண்டியது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR