உண்ணாவிரதத்தில் சிப்ஸ் சாப்பிட்ட பாஜக தலைவர்கள்- வீடியோ!

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி மற்றும் பாஜக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நேற்று மேற்கொண்டனர். உண்ணாவிரதம் இருந்தபடி பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்றார்.

Last Updated : Apr 13, 2018, 11:58 AM IST
உண்ணாவிரதத்தில் சிப்ஸ் சாப்பிட்ட பாஜக தலைவர்கள்- வீடியோ! title=

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி மற்றும் பாஜக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நேற்று மேற்கொண்டனர். உண்ணாவிரதம் இருந்தபடி பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்றார்.

இந்நிலையில் நேற்று மகாராஷ்டிராவைச் சேர்ந்த 2 பாஜக எம்எல்ஏ.,க்கள் அரசு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு அவர்கள் சிப்ஸ் சாப்பிடும் வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது. உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து இது போன்ற நடத்தைகள் செய்த அந்த 2 பாஜக எம்எல்ஏ.,க்களை நெட்டிசங்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

 

 

முன்னதாக உண்ணாவிரதத்திற்கு முன் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் சோலே படூரே சாப்பிட்ட போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பாஜக எம்எல்ஏ.,க்கள் சான்ட்விச், சிப்ஸ் உள்ளிட்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிட்ட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதால் பல்வேறு கட்சியினர் கிண்டல் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News