பட்ஜெட் 2023 எதிர்பார்ப்புகள்: நாட்டில் பட்ஜெட்டுக்கான நேரம் வந்துவிட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2023 அன்று மத்திய பட்ஜெட் 2023-24 ஐ தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட்டில் பொது மக்கள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. குறிப்பாக வரி செலுத்துவோருக்கு இந்த பட்ஜெட்டில் அதிக கோரிக்கைகள் உள்ளன. வரி விவகாரத்தில் பெரிய அளவிலான முடிவுகள் எடுக்கபட்டு சுமார் 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த பட்ஜெட் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து தொழில்கள், துறைகள் மற்றும் அமைச்சகங்களின் விருப்பப் பட்டியல்களையும் நிதி அமைச்சர் கேட்டுள்ளார். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாடும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் காத்திருக்கிறார்கள். 'ஹெல்தி இந்தியா வெல்தி இந்தியா' அதாவது, 'ஆரோக்கியமான இந்தியா, செழிப்பான இந்தியா' என்ற கருப்பொருளின் அடிப்படையில் பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் இருக்கலாம். அவற்றில் ஒன்று காப்பீட்டின் நோக்கத்தை விரிவுபடுத்துவதாக இருக்கக்கூடும்.
காப்பீட்டுக்கு வரி விலக்கு
இன்சூரன்ஸ் விஷயத்தில் நம் நாடு மிகவும் பின்தங்கியுள்ளது. இதை வீண் செலவு என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால், இது ஒரு விதத்தில் உங்களின் அவசரகால நிதியாகும். ஆனால், வரியில் இதற்கு சிறப்புப் பலன் இல்லை. ஏனெனில், மற்ற சேமிப்புக் கருவிகளைப் போலவே, இதுவும் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, அதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். காப்பீட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், வரி செலுத்துவோர் இந்த விஷயத்தில் வரிவிலக்குக்காக காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | இவ்வளவு வருமான வரி செலுத்தணுமா? அதிர்ச்சியில் வரி செலுத்துவோர்
2023 பட்ஜெட்டில் வரி விலக்கு கிடைக்கக்கூடும்
பட்ஜெட் 2023 -ல் வரி செலுத்துவோருக்கு பல வித நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வரி செலுத்துவோருக்கு ஆயுள் காப்பீட்டில் அளிக்கப்படும் விலக்கின் அளவு பட்ஜெட்டில் அதிகரிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இலிருந்து காப்பீட்டுத் திட்டங்கள் விலக்கப்படலாம்.
தற்போதைய விதிகளில், இபிஎஃப் (EPF), பிபிஎஃப் (PPF) மற்றும் ஆயுள் காப்பீடு போன்ற திட்டங்கள் 80C இன் கீழ் வரி விலக்கு பெறுகின்றன. அவற்றின் வரம்பு ரூ.1.50 லட்சம் மட்டுமே. இந்த முறை ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை 80C இன் கீழ் இரண்டாவது துணைப் பிரிவில் அரசு சேர்க்கக்கூடும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் 80C-யிலேயே கூடுதல் விலக்குக்கான வசதி செய்யப்படலாம். இதன் மூலம், வரி செலுத்துவோர் ரூ.1.50 லட்சத்திற்கு மேலான தொகைக்கும் வரிவிலக்கு பெறுவதற்கான வசதி கிடைக்கும்.
பிரிவு 80C இலிருந்து காப்பீடு விலக்கப்பட்டால் என்ன நடக்கும்?
வருமான வரி 80C இன் கீழ் கிடைக்கும் விலக்குகளிலிருந்து ஆயுள் காப்பீட்டை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமைப்பில், அனைத்து சேமிப்பு விருப்பங்களும் பிரிவு 80C இல் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் வரம்பு ரூ.1.50 லட்சம் மட்டுமே. அத்தகைய சூழ்நிலையில், ஆயுள் காப்பீட்டின் பிரீமியத்தை 80C க்கு வெளியே எடுத்தால், அதன் வரம்பு மேலும் அதிகரிக்கும்.
வரி சேமிப்புக்கு தனி விருப்பம் கிடைக்கும். இதனால் தேவையும் அதிகரிக்கும். இதன் மூலம், ஒரு தனிப் பிரிவு வரி செலுத்துவோருக்கு பணத்தைச் சேமிக்க இது உதவியாக இருப்பதோடு, முதலீட்டின் மீதான அவர்களின் ஆர்வமும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | மாத சம்பளம் வாங்குபவரா நீங்கள்? இதன் மூலம் வருமான வரியை சேமிக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ