பரோட்டா கடையில் சண்டை போட்ட AIIMS மருத்துவர்கள் - சிசிடிவி காட்சி

தெற்கு டெல்லியின் கவுதம் நகர் பகுதியில் நடந்த சண்டையில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (All India Institutes of Medical Sciences) சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2021, 07:49 PM IST
பரோட்டா கடையில் சண்டை போட்ட  AIIMS மருத்துவர்கள் - சிசிடிவி காட்சி title=

New Delhi: தெற்கு டெல்லியின் கவுதம் நகர் பகுதியில் நடந்த சண்டையில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (All India Institutes of Medical Sciences) சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை நடந்ததாக டெல்லி போலீசார் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர். கவுதம் நகரில் பகத்சிங் வர்மா பரோட்டா வாலே (paratha-seller in Delhi) என்ற இடத்திற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் சிலர் சென்று அங்கு மது அருந்தியதாக போலீசார் தெரிவித்தனர். தெற்கு டெல்லியின் துணை போலீஸ் கமிஷனர் (டி.சி.பி) அதுல் குமார் தாக்கூர் கூறுகையில், "முதலில் கடைக்காரருக்கும் மருத்துவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாகக்  கூறப்படுகிறது என்றார். 

இந்த சம்பவத்தில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் கடைக்காரர் பகத் சிங் வர்மா, அவரது மகன் அபிஷேக் ஆகியோர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இரு தரப்பினரின் அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அதன்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.சி.பி. தெரிவித்தார். அதே நேரத்தில், இந்த சம்பவம் தொடர்பான சுமார் ஒரு நிமிடம் சி.சி.டி.வி காட்சியை செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.யில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வீடியோவில், இரு தரப்பினரும் சண்டை போடுவதைக் காணலாம்.

ALSO READ | சாராயக் கடையை திறந்தால் ஓடி ஒளியும் கொரோனா, டெல்லி பெண்ணின் கோரிக்கை Video Viral

இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டையில் காயமடைந்த மருத்துவர் சதீஷ் கூறுகையில், அங்குள்ள பரோட்டா விற்பனையாளர் தன்னை துஷ்பிரயோகம் செய்தார். இதனால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் என்னை கன்னத்தில் அறைந்தார். அதன் பிறகே சண்டை ஆரம்பித்தது. மேலும் சுமார் முப்பது பேர் இரும்பு கம்பிகளுடன் அங்கு வந்தனர். நாங்கள் மது அருந்தினோம் என்று காவல்துறை சொல்கிறது. அதற்கான ஆதாரத்தை அவர்களிடம் தான் கேட்கப்பட வேண்டும் என்றார்.

 

அதே நேரத்தில், பரோட்டா கடை உரிமையாளர் பகத் சர்மா கூறுகையில், "நான் இரவு நேரத்தில் என் கடையில் இருந்தேன். நான் கொஞ்சம் மது அருந்தி இருந்தேன் என்று கூறினார். மேலும் மூன்று மருத்துவர்கள் என் கடைக்கு வந்தனர். டாக்டர் சதீஷ் என்னை கிண்டல் செய்தார். என்னை தவறான வாரத்தையில் திட்டினார், பின்னர் தாக்கினர். அதற்கு நானும் பதிலளித்தேன். ஆனால் மற்ற மருத்துவர்களும் என்னை அடித்தார்கள். உடனே என் மகனுக்கு குரல் கொடுத்தேன். என் மகன் அங்கு வந்ததும் டாக்டர் சதீஷ் அவரை கீழே தள்ளினார். அவரும் குடிபோதையில் இருந்தார் என பரோட்டா கடை உரிமையாளர் பகத் சர்மா கூறியதாக ANI ஊடகம் தெரிவித்துள்ளது. 

ALSO READ | 'யாரப்பாத்து....?' என கூறி மாஸ்க் அணிய மறுத்த மருத்துவர்: வைரல் ஆன தரமான சம்பவம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News