மம்தா கட்சியின் புரோக்கர் நீங்கள்... வெளியே செல்லுங்கள் - ப.சிதம்பரத்தை விரட்டியடித்த காங். வழக்கறிஞர்கள்...!

மேற்கு வங்க அரசுக்கு எதிரான வழக்கு ஒன்றில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வருகை மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 4, 2022, 09:58 PM IST
  • மேற்கு வங்க அரசுக்கு எதிராக அம்மாநில காங்கிரஸ் கட்சி வழக்கு
  • காங். குற்றச்சாட்டுக்கு எதிராக வாதாட வருகை தந்த ப.சிதம்பரம்
  • நீதிமன்ற வாளாகத்தில் ப.சிதம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காங். வழக்கறிஞர்கள்
மம்தா கட்சியின் புரோக்கர் நீங்கள்... வெளியே செல்லுங்கள் - ப.சிதம்பரத்தை விரட்டியடித்த காங். வழக்கறிஞர்கள்...! title=

மேற்கு வங்கத்தில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 1991-ம் ஆண்டு மெட்ரோ டெய்ரி எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு 47% பங்குகளையும், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் 10% பங்குகளையும், மீதம் உள்ள 43% பங்குகள் கெவென்டர் எனும் தனியார் நிறுவனத்திற்கும் சொந்தமானதாக இருந்தது. 

இதனிடையே, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தனது 10% பங்குகளை கெவென்டர் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. மீதம் இருக்கும் 47% பங்குகளை ஏலத்தில் விற்பனை செய்ய மேற்கு வங்க அரசு கடந்த 2017-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது. 

ஆனால், போட்டியாளர்கள் இன்றி கெவென்டர் நிறுவனம் மட்டுமே ஏலத்தில் பங்கேற்று ரூ.85 கோடிக்கு பங்குகளை வாங்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், பங்குகளை குறைந்த விலையில் விற்பனை செய்ததால் மாநில அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டதாக அம்மாநில காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்குள்ளான கெவென்டர் நிறுவனத்திற்கு ஆதரவாக வாதாட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். 

மேலும் படிக்க | காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகிறாரா ப.சிதம்பரம்? காங்கிரஸ் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல்?

ஆனால் இந்த தகவலை முன்கூட்டியே அறிந்திருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் ப.சிதம்பரத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ப.சிதம்பரத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அவரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்றும், அக்கட்சியின் புரோக்கர் என்றும் முழக்கங்களை எழுப்பி அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்துகொண்டு கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாதாடுவது நியாயமா? என்றும் கேள்வி எழுப்பினர். ப.சிதம்பரத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளால் தான் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருவதாகவும் அவர்கள் விமர்சித்தனர். 

 

 

கருப்பு கொடி ஏந்தி Go Back Chidambaram என ப.சிதம்பரத்தை சூழ்ந்து காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பியபோது அவரது பாதுகாவலர்கள் ப.சிதம்பரத்தை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரலாம்!..ப.சிதம்பரம் எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News