புதுடெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரி்க்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்த இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வந்தது.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் கடந்த ஒரு மாதமாக நீடித்து வருகிறது. மாநில முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு எதிராக நவ்ஜோத் சிங் சித்து செயல்பட்டு வந்தார். அவர் வெளிப்படையாகவே முதல்வர் அமரிந்தர்சிங்கை கடுமையாக விமர்சித்து வந்தார்.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் கட்சியை மேலும் பலவீனமாக்கியது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அணி என்றும், சித்து அணி என்றும் கட்சி இரண்டு பிரிவுகளாக பிரிந்துவிட்டது.
பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர்கள் முக்கிய முடிவெடுத்தனர். இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, முதல்வர் அமரிந்தர் சிங்கும், நவ்ஜோத் சிங் சித்துவும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்குப்பின், மாநிலக் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
AICC President Sonia Gandhi appoints Navjot Singh Sidhu as the President of the Punjab Pradesh Congress Committee with immediate effect. pic.twitter.com/c7ggMUSCts
— ANI (@ANI) July 18, 2021
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அமரிந்தர்சிங் முன்னிறுத்தப்படுவாரா இல்லை சித்துவா என்ற கேள்விகளும் எழுகின்றன.
இதனிடையில் சில நாட்களுக்கு முன்னதாக அரசியல் ஆலோசர்கர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் உட்பூசல்களை வேரறுத்து, அக்கட்சியை அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்யும் முனைப்புடன் பிரசாந்த் கிஷோர் களமிறங்கிவிட்டார் என்று தெரிகிறது.
இதற்கு முன்னர் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர் என்பதால் தற்போது நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது கட்சிக்கு பலம் தரும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
Also Read | பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் சேருவாரா? பிஜேபி-க்கு எதிராக மாஸ்டர் பிளான்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR