கொரோனா மூன்றாம் அலை இரண்டாவது அலை போல தீவிரமாக இருக்காது: ICMR

 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 26, 2021, 10:20 AM IST
  • SARS CoV2 வைரஸின் டெல்டா பிளஸ் திரிபு வைரஸ் தொற்று 48 பேருக்கு பரவியுள்ளது.
  • மகாராஷ்டிராவில், அதிகபட்சமாக கொரோனா வைரஸ் டெல்டா ப்ளஸ் திரிபு 20 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளளது.
  • இந்த வைரஸ் நுரையீரலை எளிதாக தாக்கக்கூடியது.
கொரோனா மூன்றாம் அலை இரண்டாவது அலை போல தீவிரமாக இருக்காது: ICMR title=

 

கோவிட் -19 (COVID-19) தொற்றுநோயின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து கட்டுப்பாட்டிற்குள் வரும் நிலையில், மூன்றாவது அலை தொடர்பான அச்சுறுத்தல் பெரிய அளவில் அதிகரித்து வரும் நேரத்தில், மனதிற்கு நிம்மதி அளிக்கும் வகையிலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

SARS-CoV-2 பரவும் தன்மை மற்றும் அது தொடர்பான தரவுகள் ஆகியவை தொடர்பாக, லண்டன் இம்பீரியல் கல்லூரியுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு குறித்த தகவல்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.இரண்டாவது அலை போல், மூன்றாவது அலை தீவிரமாக இருக்க வாய்ப்பு இல்லை என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

ALSO READ | டெல்டா பிளஸ் தொற்று பரவல்; தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம்

"மூன்றாவது அலை இரண்டாவது அலை போல கடுமையானதாக இருக்க வாய்ப்பில்லை. நோய்த்தடுப்பு முயற்சிகள், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் வரும் அலை மிகவும் தீவிரமானதாக இருக்காது என்று ஐசிஎம்ஆர்  ஆய்வு தெரிவிக்கிறது.  

SARS CoV2 வைரஸின் டெல்டா பிளஸ் திரிபு வைரஸ்  தொற்று 48 பேருக்கு பரவியுள்ளது. 10 மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் பாதிப்பு பதிவாகியுள்ள நேரத்தில் இந்த ஆய்வு முடிவுகள் வந்துள்ளன, மகாராஷ்டிராவில், அதிகபட்சமாக கொரோனா வைரஸ் டெல்டா ப்ளஸ் திர்பு  20 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளளது.

இந்த டெல்டா பிளஸ் வைரஸ் (Delta Plus Variant)  திரிபு முதலில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருவது கண்டறியப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் (Tamil Nadu) ஒன்பது பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வைரஸ் நுரையீரலை எளிதாக தாக்கக்கூடியது. 

ALSO READ |  COVID-19 Update: தமிழகத்தில் இன்று 5,755 பேர் பாதிப்பு, 150 பேர் உயிர் இழப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News