கொல்கத்தா: மேற்கு வங்க அரசியலில், சிறிது நாட்களாக பெரும் பரபரப்பு காணப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி (Sourav Ganguly) ஞாயிற்றுக்கிழமை, மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் (West Bengal Governor Jagdeep Dhankhar) அவர்களை இன்று சந்தித்தார்.
மம்தா பானர்ஜி மற்றும் பாஜக (BJP) இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருவதால், கங்குலி மற்றும் தங்கர் சந்திப்பு தொடர்பான ஊகங்கள் அதிகரித்துள்ளன
சவுரவ் கங்குலி மற்றும் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோரை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்த, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் இது ஒரு 'மரியாதைக்குரிய சந்திப்புப்பு' என்றும், இதற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.
சவுரவ் கங்குலி (Saurav Ganguly) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணியளவில் ஆளுநர் மாளிகையை அடைந்தார், ஆனால் சந்திப்பிற்கான காரணம் குறித்த எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. கங்குலிக்கும் தங்கருக்கும் இடையிலான இந்த சந்திப்பு மாலை ஐந்து மணி நாற்பது நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் வீடியோவை ஆளுநர் தங்கர் பகிர்ந்துள்ளார்.
Had interaction with ‘Dada’ @SGanguly99 President @BCCI at Raj Bhawan today at 4.30 PM on varied issues.
Accepted his offer for a visit to Eden Gardens, oldest cricket ground in the country established in 1864. pic.twitter.com/tB3Rtb4ZD6
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 27, 2020
அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள மாநில சட்டசபை தேர்தல்களை (West Bengal Assembly Election 2021) அடுத்து, சவுரவ் கங்குலியின் அரசியலில் ஈடுபாடு குறித்து ஊகங்கள் எழுப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்திற்கான இரண்டு நாள் பயணத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்கத்தில், பாஜக வங்காள மண்ணை சேர்ந்தவரை தான் முதல்வராக ஆக்கும் என அறிவித்தார். ஆளுநர் தங்கர் தொடர்ந்து மம்தா (Mamtha Banerjee) அரசிடம் கடுமையான கேள்விகளை எழுப்புகிறார்.
இத்தகைய சூழ்நிலையில், கங்குலிக்கும் ஆளுநர் தங்கருக்கு இடையிலான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்று பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்கான விடை இன்னும் சிறிது நாட்களில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ALSO READ | அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்கு பழி வாங்குகிறாரா டொனால்ட் ட்ரம்ப்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR