ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது.
ரூ. 2 ஆயிரம் வரையிலான டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பணபரிவர்த்தைனைக்கு இன்று முதல் சேவை வரி விலக்கு அளிக்கப்பட்டது என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்பு 15 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் டிஜிட்டல் பணபரிமாற்றத்திற்கு மாற வேண்டும் என மத்திய அரசு கூறிவருகிறது. எனவே ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் அறிவிப்பார் என தெரிகிறது.