வேகமாக பரவும் H3N2: இந்த மாநிலத்தில் முதல் மரணம் பதிவு, பீதியில் மக்கள்

H3N2 virus death: H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் குஜராத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. உயர் இரத்த அழுத்த நோயாளியான 58 வயது பெண் வதோதராவைச் சேர்ந்த சாயாஜி மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்தார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 14, 2023, 09:28 AM IST
  • 2,663 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • பன்றிக் காய்ச்சலிலிருந்து (H1N1) உருவான வைரஸ் ஆகும்.
  • தொற்று பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது.
வேகமாக பரவும் H3N2: இந்த மாநிலத்தில் முதல் மரணம் பதிவு, பீதியில் மக்கள் title=

H3N2 வைரஸால் குஜராத்தில் முதல் நபர் பலி: இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது, இந்த வைரஸால் தற்போது குஜராத் மாநிலத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. வதோதராவைச் சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயாளியாக இருந்த நிலையில் சாயாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. H3N2 வைரஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. பன்றிக் காய்ச்சலால் (H1N1) உருவான வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்ட மூன்றாவது மரணம் இதுவாகும். முன்னதாக, கர்நாடகாவில் 82 வயது முதியவர் ஒருவர் மரணமடைந்தார். மறுபுறம் ஹரியானாவில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 52 வயது நபர் இந்த வைரஸால் மரணமடைந்தார்.

H3N2 இன்ஃப்ளூயன்ஸா தொற்று வேகமாக பரவி வருகிறது
H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் (H3N2 Influenza Virus) ஏற்படும் இன்ஃப்ளூயன்ஸா நிகழ்வுகளின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்து வருகிறது மற்றும் தொற்று பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது. IDSP-IHIP (ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம்) வெளியிட்ட தரவுகளின்படி, H3N2 உட்பட காய்ச்சலின் பல்வேறு துணை வகைகளில் மொத்தம் 3038 தொற்றுகள் மார்ச் 9 வரை நாட்டில் உள்ள மாநிலங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஜனவரியில் 1245 , பிப்ரவரியில் 1307, மார்ச் 9 வரை 486 எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க | மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் கவனமாக இருங்கள்
H3N2 இன்ஃப்ளூயன்ஸா (H3N2 Influenza Virus) வைரஸ் என்பது பன்றிக் காய்ச்சலிலிருந்து (H1N1) உருவான வைரஸ் ஆகும், இது பொதுவாக வைரல் என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும், அதன் அறிகுறிகள் கொரோனா வைரஸின் அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன, எனவே இரண்டையும் வேறுபடுத்துவது கடினமாக உள்ளது. இந்த வைரஸின் பொதுவான அறிகுறிகளில் நீண்ட நாட்கள் காய்ச்சல் இருப்பது, இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் உடல்வலி ஆகியவை அடங்கும். இதனுடன், சில நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன?
எச் 3 என் 2 இன்புளுயன்சா (H3N2 Influenza Virus) வைரஸைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள சுகாதார நிபுணர்கள், முகமூடிகளைப் பயன்படுத்தவும், கை சுகாதாரத்தை கவனித்து, அவ்வப்போது கைகளை கழுவவும் பரிந்துரைத்துள்ளனர். இதனுடன், நோய் தடுப்புடன், ஆண்டுக்கு ஒருமுறை காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்சா H3N2 வைரஸ் பாதிப்பு
கடந்த 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 1,586 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. அதில் 2,663 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பொது இடங்களில் இருமல், தும்மல் வரும் போது அதனால் ஏற்படும் நீர் திவலைகள் மற்றவர்களை பாதித்து காய்ச்சல் பரவுகிறது என தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்தார். 

மேலும் படிக்க | அரசாங்கத்திற்கு பதற்றத்தை அதிகரித்த H3N2! மக்களுக்கு மிகுந்த எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News