உள்நாட்டு விமான நிறுவனமான Go First மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாகவும், தில்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தாமாகவே முன் வந்து திவால் தீர்மானம் தொடர்பான வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தலைமை செயல் அதிகாரி கௌசிக் கோனா செய்தி நிறுவனமான PTI தெரிவித்தார். "இது ஒரு துரதிர்ஷ்டவசமான முடிவு... ஆனால் நிறுவனத்தின் நலன்களைப் பாதுகாக்க இது செய்யப்பட வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார், "பிராட் & விட்னி நிறுவனம் இன்ஜின்களை வழங்காததால், கோ ஃபர்ஸ்ட் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது, 28 விமானங்களை இயக்க போவதில்லை என முடிவு செய்துள்ளது. இது நிறுவனத்தின் வசம் உள்ள விமானங்களில் கிட்டதட்ட் பாதி அளவாகும்.
3,000 பேர் பணிபுரியும் ஏர்லைன்ஸ் - ஏற்கனவே அரசாங்கத்திடம் திவால் நிலை குறித்து தெரிவித்து, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும். அதே நேரத்தில்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள விமானங்கள் அதன் திவால் விண்ணப்பத்தை ஒப்புக்கொண்ட பின்னரே மீண்டும் தொடங்கும் என்று கோனா பிடிஐயிடம் தெரிவித்தார்.
செவ்வாய் பிற்பகல் வெளியிட்ட ஒரு நீண்ட அறிக்கையில், அமெரிக்க உற்பத்தியாளர் பிராட் & விட்னி வழங்கிய என்ஜின்கள் 'செயலிழக்கும் சமப்வம் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது' என்று Go First நிறுவனம் கூறியது. இதனால் மே 1 ஆம் தேதி வரை 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. Go First ஆனது கேஷ் அண்ட் கேரி மாடலில் இயங்குகிறது - அதாவது அது இயக்கும் ஒவ்வொரு விமானத்திற்கும் எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு தினசரி பணம் செலுத்துகிறது. மேலும், விமானங்கள் இயங்காதத்டால், OMC களுக்கு நிலுவைத் தொகை செலுத்த நிதியும் இல்லை.
என்ஜின் தயாரிப்பாளர்கள் P&W 'அவசர நடுவர் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்ததால்' திவால் நிலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விமான நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தீர்ப்பில், ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் 10 இன்ஜின்களை வழங்கவும் மேலும் 2023 இறுதி வரை மாதம் 10 இன்ஜின்களை வழங்கவும் உத்தரவிட்டது. இந்த நேரத்தில் உதிரி குத்தகை இயந்திரங்கள் எதுவும் கிடைக்காததால், பிராட் & விட்னி இதுவரை ‘சேவை செய்யக்கூடிய உதிரி குத்தகை இயந்திரங்களை வழங்கத் தவறிவிட்டது’ என்றும் Go First கூறியது.
மேலும் படிக்க | காக்பிட்டில் தோழியை உபசரித்த விமானி... ஏர் இந்தியாவுக்கு DGCA நோட்டீஸ்!
2022 நிதியாண்டில் அதன் மிகப்பெரிய வருடாந்திர இழப்பை பதிவு செய்ததில் இருந்து நிதி திரட்டுவதில் பணவசதி இல்லாத ஏர்லைன்ஸ் போராடி வருகிறது. கோபர்ஸ்ட் உரிமையாளர்களான வாடியா குழுமம், பெரும்பான்மையான பங்குகளை விற்க அல்லது நஷ்டமடைந்த நிறுவனத்தை முழுவதுமாக விற்க மூலோபாய கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. என்ற செய்தியும் வெளியானது.
எனினும், கோ ஃபர்ஸ்ட் பின்னர் விமான வணிகத்திலிருந்து வெளியேறும் வதந்திகளை மறுத்தது ஒரு மூத்த விமான நிறுவன அதிகாரி ANI செய்தி நிறுவனத்திடம், 'பங்குகளை குறைக்கவோ அல்லது விமான வணிகத்தில் இருந்து வெளியேறவோ எந்த திட்டமும் இல்லை' என்றும், விளம்பரதாரர்கள் வணிகத்திற்கும் நிதி உதவிக்கும் உறுதியளித்துள்ளனர்' என்றார்
கடந்த 36 மாதங்களில் 'கணிசமான நிதி' - ₹3,200 கோடி கிடைக்கப்பெற்றுள்ளதாக விமான நிறுவனம் இன்று கூறியுள்ளது; கடந்த 24 மாதங்களில் ₹2,400 கோடியும், ஏப்ரலில் மட்டும் ₹290 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. பி&டபிள்யூ பிரச்சினை தீர்க்கப்படும் வரை வாடியா குழுமம் முதலீடு செய்ய தயங்குவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது
ஏர்லைன்ஸ் அறிக்கையின்படி, இன்ஜின் சப்ளை பிரச்சினையால் ₹10,800 கோடி வருவாய் இழப்பு மற்றும் கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், 'இந்த (மற்றும் பிற) இழப்புகளை மீட்பதற்காக' சிங்கப்பூர் நடுவர் மன்றத்தில் தோராயமாக ₹8,000 கோடி இழப்பீடு கோரியுள்ளது. Go First, அமெரிக்க உற்பத்தியாளர்களான பிராட் & விட்னி மீது அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் என்ஜின்கள் வழங்காதது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தது மற்றும் சிங்கப்பூர் நடுவர் மன்றத் தீர்ப்பை தனக்குச் சாதகமாக அமல்படுத்தக் கோரியது.
கோ பர்ஸ்ட் விமானங்களை ரத்து செய்வது இது முதல் முறையல்ல - ஜனவரி மாதத்தில் 8.4 சதவீதமாக இருந்த Go First நிறுவனத்தின் சந்தைப் பங்கு மார்ச் மாதத்தில் 6.9 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தேசிய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் DGCA தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 55 பயணிகளை ‘விட்டு’ சென்ற Go First விமானம்! ரூ.10 லட்சம் அபராதம் விதித்த DGCA
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ