பாஜக மதிக்கவில்லை என்றால் கட்சியை விட்டு வெளியேறுவது நல்லது என்று நிதின் பட்டேலுக்கு ஹார்திக் படேல் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னா் நடைபெற்ற குஜராத் மாநில சட்டசடை தோ்தலில் பா.ஜ.க. அரசு 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
மொத்தமுள்ள, 182 இடங்களில், 92 இடங்களில் வெற்றி பெற்றால், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்பதால், 99 இடங்களில் வெற்றி பெற்ற, பா.ஜ.க., எந்த சிரமமும் இன்றி தொடர்ந்து, ஆறாவது முறையாக, மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்து உள்ளது.
இதில், குஜராத்தில் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேல் மற்றும் 20 அமைச்சர்கள் கடந்த 22–ந்தேதி பதவி பதவியேற்றனர்.
அதேபோன்று, இமாச்சலப்பிரதேசத்தின் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பா.ஜ.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. இதில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பா.ஜ.,வின் மூத்த தலைவரும், ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவருமான, ஜெய்ராம் தாக்கூர் கடந்த 23–ந்தேதி பதவி ஏற்றார்.
இந்த இரு மாநில முதல்வர்களின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அவரை தொடர்ந்து பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியை சிறப்பித்தன.
அதனை தொடர்ந்து,மாநில கவர்னர் ஓ.பி.கோலியை சந்தித்த பா.ஜனதா தலைவர்கள், மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதை ஏற்று, புதிய அரசை அமைக்குமாறு கவர்னரும் அழைப்பு விடுத்தார். அதன்படி குஜராத்தில் புதிய அரசு பதவி ஏற்றது.
இந்நிலையில் கடந்த ஆட்சியில் தன்னிடம் இருந்த நிதித்துறை தற்போது பறிக்கப்பட்டதால் துணை முதல்-மந்திரி பதவியை நிதின் பட்டேல் ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதித்துறை பறிக்கப்பட்டதை நிதின் பட்டேல் அவமானமாக கருதுவதாகவும், நேற்று நடைபெற்ற அமைச்சரவை பொறுப்பேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அரசு வாகனம் மற்றும் பாதுகாவலர்களையும் நிதின் பட்டேல் ஏற்க மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக சாரங்க்பூரில் படேல் இன தலைவர் ஹார்திக் படேல் செய்தியார்களிடம் கூறுகையில்;- பாஜக மதிக்கவில்லை என்றால் துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல் கட்சியை விட்டு வெளியே வருவது நல்லது. நிதின் பட்டேலுடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் வெளியே வர தயாராக உள்ளனர். பின்னர் அவர் நல்ல நிலைப்பட்டை பெற காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
If Gujarat Deputy CM #NitinPatel along with 10 MLAs is ready to leave BJP, then will talk to Congress to get him a good position. If BJP does not respect him, he should leave the party: Hardik Patel in Gujarat's Sarangpur pic.twitter.com/cFlORE7Yqu
— ANI (@ANI) December 30, 2017