Bizarre! கொரோனாவால் 'இறந்த' நபர்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய அதிசயம்!

கமலேஷ் படிதார்  என்ற நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் குடும்பத்தினரிடம் அவரது "உடல்" ஒப்படைக்கப்பட்ட பிறகு, குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 16, 2023, 02:57 PM IST
  • கோவிட்-19 அலையின் போது கமலேஷ் படிதார் நோய்வாய்ப்பட்டார்.
  • COVID-19 தொற்று காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தன.
  • குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்து பின்னர் தங்கள் கிராமத்திற்குத் திரும்பினர்.
Bizarre! கொரோனாவால் 'இறந்த' நபர்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய அதிசயம்! title=

இறந்தவர்கள் திரும்பி வந்தால், எப்படி இருக்கும் என்று எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா? நமது மிகவும் அன்புக்குரிய நபர் என்றால், நிச்சயம் அந்த உணர்வு மகிழ்ச்சியை கொடுக்கும். அப்படி ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.  மருத்துவமனையில் கோவிட்-19 காரணமாக "இறந்ததாக" அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது குடும்ப உறுப்பினர்களால் இறுதிச் சடங்குகளைச் செய்ப்பட்ட நிலையில், இறந்ததாக கூறப்படும் நபர் மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.

35 வயதான கமலேஷ் படிதாரின் குடும்ப உறுப்பினர்கள், அவரது இறுதிச் சடங்குகளைச் செய்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சனிக்கிழமை காலை 6 மணியளவில் கரோட்கலா கிராமத்தில் உள்ள தனது தாய்வழி அத்தையின் வீட்டின் கதவைத் தட்டியபோது ஆச்சரியமடைந்ததாக குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இரண்டாவது கோவிட்-19 அலையின் போது கமலேஷ் படிதார் நோய்வாய்ப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மருத்துவமனை அவர்களிடம் "உடலை" ஒப்படைத்த பிறகு, குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர் என்று அவரது உறவினர் முகேஷ் படிதார் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் படிக்க | COVID-19 in India: தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை, அடுத்த அலையின் அறிகுறியா?

"இப்போது, அவர் வீடு திரும்பியுள்ளார், ஆனால் இந்த காலகட்டத்தில் அவர் எங்கு தங்கினார் என்பது பற்றி அவர் எந்த தகவலையும் இன்னும் கூறவில்லை," என்று உறவினர் கூறினார். கன்வான் காவல் நிலைய பொறுப்பாளர் ராம் சிங் ரத்தோர், இது குறித்து, கமலேஷ் படிதார் 2021 இல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வதோதராவில் (குஜராத்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்ததாக கூறினார்.

COVID-19 தொற்று காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில், அதைத் தொடர்ந்து குடும்பத்தினர் வதோதராவில் உள்ள மருத்துவமனையால் வழங்கப்பட்ட உடலுக்கு, இறுதிச் சடங்குகளைச் செய்து, பின்னர் தங்கள் கிராமத்திற்குத் திரும்பினர். தற்போது, அவர் சனிக்கிழமை வீடு திரும்பியபோது அவர் உயிருடன் இருப்பது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியவந்தது என்று காவல் துறை அதிகாரி ரத்தோர் கூறினார். கமலேஷ் படிதாரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகே இந்த விவகாரம் தெளிவாகத் தெரியும் என்று காவல் துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்தியாவில் அடுத்த 10 நாட்களுக்கு கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும்... ஆனால்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News