புது டெல்லி: நீட்-யுஜி மற்றும் ஜேஇஇ (NEET-UG and JEE ) தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கடந்த மாதம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆளும் ஆறு மாநிலங்களின் அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் (Supreme Court) இன்று (வெள்ளிக்கிழமை) மறுத்துவிட்டது.
நீதிபதிகள் அசோக் பூஷண், பி ஆர் கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மறுஆய்வு மனுவை அறைகளில் பரிசீலித்து, பின்னர் அந்த மனுவில் எந்த தகுதியும் இல்லை என்று கூறியது.
உயர்நீதிமன்ற உத்தரவு மாணவர்களின் "வாழ்க்கைக்கான உரிமையை" பாதுகாக்கத் தவறியதாகவும், COVID-19 தொற்றுநோய்களின் போது தேர்வுகளை நடத்துவதில் எதிர்கொள்ள வேண்டிய "சிக்கல்களை" புறக்கணித்ததாகவும் மனு தாக்கல் மாநில அமைச்சர்கள் கூறியிருந்தனர்.
இரண்டு தேர்வுகளையும் நடத்தும் தேசியத் தேர்வு முகமை (NTA) செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 வரை ஜே.இ.இ முதன்மை தேர்வுகளை நடத்துகிறது. அதே நேரத்தில் நீட் தேர்வுகள் செப்டம்பர் 13 அன்று நடைபெறும் என அறிவித்துள்ளது.
ALSO READ |
NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி போடப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!
நீட் 2020: கொரொனாவுக்கு மத்தியில் தேர்வு நடத்த வழிகாட்டுதலை வெளியிட்ட சுகாதார அமைச்சகம்
இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் JEE (முதன்மை) மற்றும் நீட் (NEET) தேர்வுகளை நடத்துவதற்கான தகவல்கள் தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) தரப்பில் முன்பே அறிவிக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வெளியிடப்பட்டது.
பல மாநில அரசுகள் நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனாலும் தேசியத் தேர்வு முகமை தனது நிலைபாட்டில் உறுதியாக இருந்தது.
இதனையடுத்து மாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால் நீதிமன்றம் நீட் தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் எனக்கூறி உத்தரவிட்டது. அதன் பிறகு பாஜக ஆட்சி செய்யாத ஆறு மாநில அமைச்சர்கள், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என தாக்கல் சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை குறித்து விசாரிக்க எதுவும் இல்லை எனக்கூறி உச்ச நீதிமன்றம் நிராகரித்தது