எம்.ஜே.அக்பருடனான உறவு கட்டாயத்தால் நேர்ந்த உறவு - அமெரிக்க வம்சாவளி செய்தியாளர் விளக்கம்....
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், “ நானும் பாதிக்கப்பட்டேன்” என பொருள்படும் #MeToo என்ற விழிப்புணர்வு பிரசாரம் இணைய தளத்தில் பரவி வருகிறது. இதில் தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் உள்ளிட்ட பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் நானா படேகருக்கு எதிராக தனுஸ்ரீ தத்தா அளித்திருக்கும் புகார் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதை தொடர்ந்து, இத் குறித்த புகாரில் மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் #MeToo குறித்த புகார் காரணமாக தனது அமைச்சர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பருடனான உறவு இரு தரப்பு ஒப்புதலுடன் நிகழ்ந்த உறவு அல்ல என அமெரிக்க வம்சாவளி செய்தியாளர் பல்லவி கோகாய் தெரிவித்துள்ளார்.
பல்லவியுடன் இரு தரப்பு ஒப்புதலுடன் கூடிய உறவு இருந்ததாக அக்பர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது டிவிட்டர் பதிவில் அதனை மறுத்துள்ள பல்லவி கோகாய், அதிகாரத்தின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு உறவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அது குறித்த பல உண்மைகளை தொடர்ந்து வெளியிட இருப்பதாகவும், அக்பரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் தைரியமாக வெளியில் வந்து புகார் தெரிவிக்க அது ஏதுவாக அமையும் என்றும் கூறியுள்ளார்.