Lakshagriha: இந்துக்களுக்கு மீண்டும் ஒரு வெற்றித் தீர்ப்பு! மகாபாரத ‘அரக்கு மாளிகை’ வழக்கில் வெற்றி

Lakshagriha Verdict Victory For Hindus: மகாபாரதத்துடன் சம்பந்தப்பட்ட பழங்கால தளம் தொடர்பான வழக்கில் இந்துக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 6, 2024, 09:17 AM IST
  • மகாபாரதத்துடன் தொடர்புடைய பழங்கால தளம் தொடர்பான வழக்கு
  • அரக்கு மாளிகை வழக்கில் இந்துக்களுக்கு வெற்றி
  • தொல்லியல் துறையின் உறுதிப்படுத்தல்
Lakshagriha: இந்துக்களுக்கு மீண்டும் ஒரு வெற்றித் தீர்ப்பு! மகாபாரத ‘அரக்கு மாளிகை’ வழக்கில் வெற்றி title=

Victory For Hindus: 53 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து தரப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று அனைவரும் தெரிவிக்கின்றனர். மகாபாரதத்துடன் சம்பந்தப்பட்ட பழங்கால தளம் தொடர்பான வழக்கில் இந்துக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.  
மகாபாரதத்தில், பாண்டவர்களைக் கொல்ல கௌரவர்கள் கட்டிய அரக்கு மாளிகை தொடர்பான வழக்கில் இந்து தரப்புக்கு வெற்றி கிடைத்துள்ள்து.

சட்டப் போராட்டங்களில் வெற்றி

53 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து தரப்புக்கு வெற்றி கிடைத்துள்ளதும், அண்மையில் காசியில் ஞானவாபியில் இந்துக்கள் வழிபட கிடைத்த அனுமதி கிடைத்ததும், தொடர்ந்து இந்துக்களுக்கு வெற்றி கிடைத்து வருவதாக இந்துக்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் பேசப்படுகிறது.

அரக்கு மாளிகை வழக்கு

பிரதேசத்தில் பாக்பட் மாவட்டம், பர்னாவா கிராமத்தில் உள்ள அரக்கு மாளிகை இருந்த இடம் தொடர்பான வழக்கில், பாக்பத் நீதிமன்றம் நேற்று இந்து தரப்புக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரதிவாதியான கிருஷ்ண தத் ஜி மகராஜுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

புராதன தளம்

இந்த இடம் முஸ்லீம் தர்கா மற்றும் கல்லறை என்று வாதிட்ட இஸ்லாமியர்களின் உரிமைகோரல்களை நிராகரித்த நீதிமன்றம்,  அந்த இடத்தில் அரக்கு மாளிகை என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்ட இடம் தான் என்றும், பண்டைய இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் நடந்ததற்கான ஆதாரம் இருப்பதை மறுக்க முடியாது என்றும் அங்கீகரித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, லக்ஷகிரிஹாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | முரசொலி நில வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

லக்ஷகிரிஹா (Lakshagriha) 

மகாபாரத காலத்தில், கௌரவர்கள் ஆடம்பரமான அரண்மனையை கட்டினார்கள். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கலைக் கொண்டு கட்டப்பட்ட இந்த அழகான அரண்மணையை கட்டிய துரியோதனன், அரக்கு மாளிகை என்று அறியப்படும் அங்கு பாண்டவர்களை தங்க வைத்தார். எளிதில் தீப்பற்றும் அரக்கு கொண்டு கட்டப்பட்டதால் அரக்கு மாளிகை என்று அறியப்படும் இந்த மாளிகையை கட்டிடக் கலைஞர் புரோச்சனா கட்டினார்.

தங்கள் எதிரிகளை அழிக்கும் நோக்கத்தில் ரகசியமாக தீ வைத்து பாண்டவர்களை அழிக்க துரியோதனன் திட்டமிட்டார். ஆனால், மந்திரி விதுரரின் மூலம் இந்த ரகசியத் திட்டத்தை அறிந்துக் கொண்ட பாண்டவர்கள், சுரங்கப்பாதை வழியாக தப்பிவிட்டனர் என்பது மகாபாரதத்தில் உள்ள ஒரு முக்கியமான நிகழ்வாகும். அந்த நிகழ்வு நடந்த இடம் தான் தற்போது சட்டச் சிக்கலில் இருந்து தப்பித்து இந்துக்களின் முக்கியமான இடம் என்று தீர்ப்பு வந்துள்ளது.  

சட்டப் போராட்டம் மற்றும் நிலச் சர்ச்சை
மார்ச் 31, 1970 இல் பார்னவா கிராமத்தைச் சேர்ந்த முகிம் கான் என்பவர் மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது, பர்னாவாவில் உள்ள பழங்கால இடத்தில் ஷேக் பதுருதீனுக்குச் சொந்தமான தர்காவும் கல்லறையும் இருப்பதாக தெரிவித்தார். இதை  கிருஷ்ண தத் ஜி மகாராஜ் என்பவர் மறுத்தார். அவர் அங்குள்ள கல்லறையை அகற்றி இந்துக்களுக்கான குறிப்பிடத்தக்க புனித யாத்திரை தளத்தை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வழக்குத் தொடுத்தார்.

நீதிமன்ற விசாரணை
இரு தரப்பிலிருந்தும் சாட்சியங்களைக் கேட்ட ஜூனியர் டிவிஷன் சிவில் நீதிபதி சிவம் திவேதி, பர்னாவாவில் உள்ள பழங்கால தளம் மகாபாரத காலத்தைச் சேர்ந்த லக்ஷகிரிஹா (அரக்கு மாளிகை) என்று சாட்சியங்களின் அடிப்படையில் உறுதியாவதாக தீர்ப்பளித்தார்.

ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், அந்த இடம் மயானம் இல்லை என்றும், 108 ஏக்கர் நிலம் கொண்ட அந்த உயரமான மேட்டுப் பகுதி மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் தங்கவைக்கப்பட்ட அரக்கு மாளிகை தான் என்றும் உறுதி செய்தது.

மேலும் படிக்க | 15 பேருக்கு மரண தண்டனை... பாஜக தலைவர் கொலை வழக்கு - கேரள நீதிமன்றம் தீர்ப்பு

மேல்முறையீடு

அரக்கு மாளிகை விவகாரத்தில்,தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மேல்முறையீடு செய்வது குறித்து பரிசீலிப்பதாக  முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் ஷாஹித் கான், தெரிவித்துள்ளார்.

ASI பதிவுகள்

சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் அரக்க்கு மாளிகை மற்றும் பிற வரலாற்று தளங்கள் இருப்பதை உறுதிப்படுத்தும் எச்சங்களை இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India) கண்டுபிடித்துள்ளது. பர்னாவா கிராமத்திற்கு அருகில் உள்ள இந்த மேட்டுபகுதியை இந்திய தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி செய்து, பழங்கால தொல்பொருட்களைக் கண்டறிந்துள்ளது.

இதன் அடிப்படையில் அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்தது, அரக்கு மாளிகையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக பாண்டவர்கள் வெளியேறதாக மகாபாரதத்தில் இருக்கும் குறிப்புகளுக்கு ஏற்ப, அந்தப் பகுதியில் குகைகள் மற்றும் சுரங்கம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இடத்தை சுற்றுலாத் தளமாக உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கலாச்சார பாரம்பரியத்திற்கு பங்களித்து, தொலைதூரத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை இந்த தளம் தொடர்ந்து ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இன்னும் கூட 25 வழக்குகள் போடுங்கள், நான் பயப்பட மாட்டேன் -ராகுல் காந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News