ஆதார் எண்ணை, பான் கார்டு எண்ணுடன் இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை, பான் கார்டு எண்ணுடன் இணைக்க இன்னும் சில தினங்களே உள்ளது. விரைவில் இரு எண்களையும் இணைத்து பல இன்னல்களிலிருந்து தப்பிக்க வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள், ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகி விடுவதோடு மட்டுமல்லாது, வருமானவரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும்.
பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைப்பதற்கு இதற்குமுன் இருமுறை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதி, இறுதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்திற்குள் இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்காதவர்கள், இந்த காலக்கெடுவிற்குள் இணைத்து தேவையற்ற பாதிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA(2), ஜூலை 1, 2017 நிலவரப்படி PAN வைத்திருக்கும், மற்றும் ஆதார் பெற தகுதியுடைய ஒவ்வொரு நபரும் தனது ஆதார் எண்ணை வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும் உங்கள் PAN, Aadhaar இன்னும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், உறுதிப்படுத்த I-T இணையதளத்தில் உள்ள இணைப்பு ஆதார் நிலை பக்கத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம்.
இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையத்தால் (UIDAI) ஆதார் வழங்கப்படுகிறது, மேலும் PAN என்பது ஒரு நபர், நிறுவனம் அல்லது நிறுவனத்திற்கு I-T துறையால் ஒதுக்கப்பட்ட 10 இலக்க எண்ணெழுத்து குறியீடு ஆகும்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.