I.N.D.I.A. Alliance: பாஜகவை எதிர்கொள்ள இறுதி வியூகம்.. நாளை கூடுகிறது “இந்தியா கூட்டணி”

INDIA Alliance Meeting In Delhi: நாளை டெல்லியில் எதிர்கட்சிகளின் "இந்தியா கூட்டணி"யின் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிகின்றன. அதுக்குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 17, 2024, 02:24 PM IST
I.N.D.I.A. Alliance: பாஜகவை எதிர்கொள்ள இறுதி வியூகம்.. நாளை கூடுகிறது “இந்தியா கூட்டணி” title=

ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணிக் கட்சிக் கூட்டம்: ஒரே வரிசையில் இணைந்துள்ள எதிர்கட்சிகளின் "இந்தியா கூட்டணி"யின் கூட்டம் டெல்லியில் நாளை (செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 19) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லிக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்தும், யார் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்துக்கொள்வார்கள் எனத் தெரிகிறது. இந்தியா கூட்டணியில்  இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தொகுதிப் பங்கீடு குறித்த பிரச்சினை சுமூகமாக தீர்ந்தால் மேலும் சில கட்சிகளையும் இந்தியா கூட்டணியில் சேர்க்கலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது

டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் சீட் பகிர்வு

வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள “இந்தியா கூட்டணி” மூலம் எதிர்கட்சிகள் இணைந்து பொதுவான ஒரு திட்டத்தை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால், சில எதிர்க்கட்சி தலைவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் சீட் பகிர்வு உடன்படிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

மாநில கட்சிகள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை?

அதேநேரத்தில் எந்தெந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கிறதோ, குறிப்பாக மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், டெல்லி, பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் சீட் பங்கீடு விவாதம் சிக்கலை சந்திக்கலாம். ஏனென்றால் அங்கு மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே எந்தக் கட்சியும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. மறுபுறம் சமாஜ்வாடி, திமுக, சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) போன்ற கட்சிகள் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு செய்வதற்கான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க - தேர்தல் அரையிறுதி வெற்றி.. 2024 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா? இதுவரை நடந்தது என்ன?

எதிர்க்கட்சி கூட்டணி இடையே சீட் பங்கீடு எப்படி நடக்கும்?

மேற்கு வங்காளம், டெல்லி, பஞ்சாப் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் தான் (இந்தியா கூட்டணி இடம்பெற்றுள்ள) ஆட்சியை நடத்துகின்றன. அந்த மாநிலங்களில் மட்டும் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவை அந்தந்த ஆளும் மாநில கட்சிகள் முடிவெடுக்கும். அதேபோல மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், தெலுங்கான, ஆந்திர பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாஜகவுடன் நேரடியாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. அங்கு சில தொகுதிகளை தவிர ஏறக்குறைய அனைத்து தொகுதிகளும் காங்கிரஸ் வசம் வரலாம். எப்படி இருந்தாலும் எதிர்க்கட்சி கூட்டணி இடையே சீட் பங்கீடு மிகவும் கடினமான பணியாக கருதப்படுகிறது.

எதிர்கட்சி தலைவர்கள் டெல்லி பயணம்

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதேபோல பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் டெல்லி செல்கிறார். ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இன்று பாட்னாவில் இருந்து டெல்லி சென்றனர். 

நிதிஷ்குமாரை பிரதமரின் முகமாக அறிவிக்க வேண்டும் -ஜேடியு

இதற்கிடையில், இந்தியக் கூட்டணிக் கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக, நிதிஷ் குமாரின் கட்சியான ஜனதா தளம் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பெரிய கோரிக்கையை வைத்துள்ளது. நிதிஷ்குமாரை பிரதமரின் முகமாக அறிவிக்க வேண்டும் என ஜேடியு எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க - INDIA Alliance: இந்தியா கூட்டணியில் விரிசல்? 3 முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மறுப்பு

2024 தேர்தலுக்குப் பிறகு பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும் -மம்தா

2024 தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனைக் கூட்டணி நிச்சயம் சாத்தியமாகும் என்றார்.

இந்தியா கூட்டணி கூட்டம் எங்கு, எப்பொழுது நடைபெற்றது?

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் ஜூன் 23 அன்று பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜூலை 17-18 அன்று பெங்களூரு மற்றும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 இடையே மும்பையில் கூட்டம் நடைபெற்றன. மக்களவைத் தேர்தல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த 27 கட்சிகள் ஏற்றுக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 4-ல் தோல்வி, 1-ல் வெற்றி

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில் நான்கு மாநிலத்தில் தோல்வியை சந்தித்துள்ள இந்த நேரத்தில் காங்கிரஸ் 'இந்தியா கூட்டணி' கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. தெலுங்கானாவில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற முடிந்தது.

மேலும் படிக்க - மோடி பிராண்ட் வெற்றி பெற்றது! ஹாட்ரிக் வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News