ரேபரேலியில் ராகுல் காந்திக்காக பிரியங்கா தீவிர பிரச்சாரம்

Lok Sabha Elections: ராகுல் காந்தி இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில், அமேதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டசபைக்கு சென்றுள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 8, 2024, 04:26 PM IST
  • ரேபரேலியில் ராகுல் காந்தி.
  • ரேபரேலி: காந்தி குடும்பத்தின் கோட்டை.
  • அனைத்திற்கும் ஜிஎஸ்டி: சாடிய பிரியங்கா.
ரேபரேலியில் ராகுல் காந்திக்காக பிரியங்கா தீவிர பிரச்சாரம்  title=

Lok Sabha Elections: உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் முதல்முறையாக ராகுல் காந்தியை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ரேபரேலி தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்றுதான் காங்கிரச் கட்சி அமேதி மற்றும் ரேபரேலிக்கான வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் ரேபரேலியில் ராகுல் காந்தியும் அமேதியில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடுகிறார்கள்.

ரேபரேலியில் ராகுல் காந்தி

ராகுல் காந்தி இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில், அமேதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டசபைக்கு சென்றுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் அமேதியிலும், கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் போட்டியிட்டார். அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை சந்திக்க நேரிட்டது. எனினும், வயநாட்டில் அவர் நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வயநாட்டில் வெற்றி பெற்று அவர் நாடாளுமன்றத்திற்கு சென்றார். தனது ஐந்தாவது மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியுடன் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். 

ரேபரேலி: காந்தி குடும்பத்தின் கோட்டை

ரேபரேலி தொகுதி காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் 1999 முதல் சோனியா காந்தி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். பிப்ரவரியில் அவர் தேர்தல் களத்தில் இருந்து விலக முடிவு செய்தார். இதையடுத்து இங்கிருந்து ராகுல் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தற்போது ராகுல் காந்தியின் வெற்றியை உறுதி செய்ய பிரியங்கா காந்தி வதேரா முழு முனைப்புடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது பிரச்சாரத்தில் நேரடியாக பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை குறிவைப்பது தெரிகிறது.

ரேபரேலியில் நடந்த தேர்தல் பேரணியில் நாட்டின் இரண்டு பெரிய பிரச்சனைகளை பற்றி பிரியங்கா காந்தி முக்கியமாக குறிப்பிட்டார். பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை இன்று நாட்டில் இரண்டு பெரிய பிரச்சனைகளாக உள்ளன என்று அவர் கூறினார். மக்கள் கடுமையாக உழைத்தும் தேவைகள் நிறைவேறாத அளவுக்கு மோடியின் ஆட்சியில் பணவீக்கம் உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க | ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்... 80+ விமானங்கள் ரத்து..!!

அனைத்திற்கும் ஜிஎஸ்டி: சாடிய பிரியங்கா

மக்களுக்கு உதவி செய்வதற்கு பதிலாக அவர்கள் கையில் 5 கிலோ ரேஷனை மட்டும் அரசு வழங்கி விட்டது என பிரியங்கா மத்திய அரசின் ரேஷன் திட்டத்தை சாடினார். அனைத்திற்கும் ஜிஎஸ்டி கட்ட வேண்டியிருப்பதால் விவசாயிகளுக்கு தங்கள் விவசாயத்தின் மூலம் வரும் வருமானம் முழுவதுமாக கிடைப்பதில்லை என்று அவர் கூறினார். ராகுல் காந்தியை தோற்கடிக்க பாஜக தனது முழு பலத்தையும் பயன்படுத்தியதாகவும், ஆனால் அவர் பின்வாங்கவில்லை என்றும் பிரியங்கா கூறினார். மக்களுக்கு நீதி வழங்குவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார் என்றும் பிரியங்கா தெரிவித்தார். 
  
ராகுல் காந்தியின் பயணங்களைப் பற்றிக் குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, மக்கள் சொல்வதைக் கேட்கவும், மக்கள் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும் 'பாரத் ஜோடோ யாத்ரா' மற்றும் 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா' ஆகிய யாத்திரைகளை மேற்கொண்டார் என தெரிவித்தார். இன்று நாட்டில் அரசியல் திசை தவறாக இருப்பதை மக்களுக்கு நினைவூட்டுவதே ராகுல் காந்தியின் யாத்திரையின் நோக்கமாக இருந்தது என பிரியங்கா மேலும் கூறினார். 

மேலும் படிக்க | இன்றும் இடைக்கால ஜாமின் கிடைக்கவில்லை.. காத்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News