#MeToo: எம்.ஜே. அக்பர் அவதூறு வழக்கை ஏற்றது நீதிமன்றம்; விசாரணை அக்டோபர் 31

எம்.ஜே. அக்பர் வழக்கு விசாரனைக்கு ஏற்றக் கொள்வதாகவும், அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 18, 2018, 03:09 PM IST
#MeToo: எம்.ஜே. அக்பர் அவதூறு வழக்கை ஏற்றது நீதிமன்றம்; விசாரணை அக்டோபர் 31 title=

#MeToo ஹாஷ்டேக் மூலம் எம்.ஜே. அக்பர் மீது இதுவரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், நாடு திரும்பிய எம்.ஜே. அக்பர், தன்மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மை இல்லை. எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என விளக்கம் அளித்தார். பின்னர் எம்.ஜே. அக்பர் தனக்கு எதிராக முதலில் பாலியல் புகார் தெரிவித்த பிரியா ரமணி என்கின்ற பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். 

ஆனாலும் எம்.ஜே. அக்பர் பதவி விலகவேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. 

இந்நிலையில் நேற்று எம்.ஜே. அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தன் மீதான குற்றசாட்டை தனிநபராக எதிர்கொள்ளவே பதவியை ராஜினாமா செய்ததாக எம்.ஜே. அக்பர் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
 
இன்று பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் எம்.ஜே. அக்பர் வழக்கு விசாரனைக்கு ஏற்றக் கொள்வதாகவும், அதற்க்கான சாட்சி மற்றும் ஆதாரங்களையும் வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அன்று வழக்கு தொடுத்த எம்.ஜே. அக்பர் ஆஜராக வேண்டும் எனக்கூறி உத்தரவு பிறப்பித்தார்.

Trending News