மும்பை: மகாராஷ்டிராவில் (Maharashtra) ஞாயிற்றுக்கிழமை 3,007 புதிய கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று பதிவாகிய பின்னர், மாநிலத்தில் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,975 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று காரணமாக மேலும் 91 பேர் இறந்த பின்னர், மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் (Maharashtra) கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சீனாவை (China) விட அதிகமாக உள்ளன என்று அந்த அதிகாரி கூறினார். சீனாவில் 83,036 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 85,975 கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளன. அவற்றில் 39,314 பேர் குணமடைந்துள்ளனர். 3,060 பேர் இறந்துள்ளனர். 43,591 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,51,647 மாதிரிகள் மாநிலத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன.
READ | 200 இட்லி விற்பனையாளர்களை மும்பையிலிருந்து தமிழகத்திற்கு திருப்பி அனுப்பிய நடிகர்
ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான 9,971 பேருக்கு COVID-19 பாதிப்பு:
நாட்டில் (India) தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 9,971 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,628 ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை (Corona Death) தற்போது வரை 6,929 ஐ எட்டியுள்ளது.
சுகாதார அமைச்சின் (Health Ministry) கூற்றுப்படி, சனிக்கிழமை காலை முதல் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 287 பேர் இறந்துள்ளனர். சனிக்கிழமையன்று, கோவிட் -19 உலகளாவிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட உலகின் ஐந்தாவது நாடாக இந்தியா ஸ்பெயினை முந்தியுள்ளது. இப்போது, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டன் மட்டுமே அதற்கு முன்னதாக உள்ளன.
READ | வெட்டுக்கிளி தாக்குதலை தடுக்க, வெடிகளை வெடித்து, மேள தாளங்களை அடிக்க வேண்டும்
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, நாட்டில் 1,20,406 பேர் இன்னும் கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,19,292 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளதாகவும், ஒரு நோயாளி வெளிநாடு சென்றுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், "இதுவரை 48.36 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர்" என்றார்.