நிர்மலா சீதாராமன் குறித்து ராகுல் காந்தியின் கருத்து - தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ்

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து ராகுல்காந்தியின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2019, 08:53 PM IST
நிர்மலா சீதாராமன் குறித்து ராகுல் காந்தியின் கருத்து - தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் title=

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோசடி நடந்துள்ளதாக கூறி வந்த காங்கிரஸ், தற்போது நடைபெறு வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பெரும் விவாதத்துக்கு உள்ளாக்கியது. ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தவித மோசடியும் நடக்கவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் விளக்கம் அளித்தார். 

இந்த நிலையில, இன்று ராஜஸ்தான் சுற்றுபயண சென்ற காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் ராகுல்காந்தி ஜெய்பூரில் நடைபெற்ற கிசான் கூட்டத்தில் பேசும் போது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி அரசு பெரும் மோசடி செய்துள்ளது. அதுக்குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பிய போது, அந்த கேள்விக்கு பதில் அளிக்க நாட்டின் 55 இன்ஞ் மார்பு கொண்ட பிரதமர் நாட்டின் ஒரு நிமிடம் கூட வரவில்லை. ரபேல் குறித்த கேள்விக்கு பயந்துக்கொண்டு பிரதமர் மோடி அவர்கள் பஞ்சாப் சென்றுவிட்டார். ஏனென்றால் நாட்டின் சொக்கிதார் (பாதுகாவலன்) எனக் கூறும் பிரதமர் ஒரு மோசடி செய்தார். அதனால் அவர் ஓடிவிட்டார். 

ரபேல் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், ஒரு பெண்ணிடம் (நிர்மலா சீதாராமன்) என்னை காப்பாத்துங்கள் என நாட்டின் பிரதமர் மோடி ஒளிந்துக்கொண்டர். ஆனால் அந்த பெண் (நிர்மலா சீதாராமன்) தொடர்ந்து 2.30 மணி நேரமாக பேசியும் பிரதமரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் நாங்கள் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை என கூட்டத்தில் பேசினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் குறித்து மிகப்பெரிய தேசிய கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசி இருப்பது, பெண்களை பலவீனமாக அவர் நினைக்கிறாரா? என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. 

இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய பெண்கள் ஆணையம் (NCW) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளை (வியாழக்கிழமை) இதுக்குறித்து ராகுல்காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளது.

Trending News