மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் வரும் ஜூலை 20-ஆம் நாள் (வெள்ளிகிழமை) நடைபெறுகிறது.
நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற உள்ள நிலையில், எந்த கட்சிக்கு எத்தனை எம்.பி.,க்கள் உள்ளன. பெரும்பான்மையை நிருபிக்க எத்தனை எம்.பி.,க்கள் தேவை என்பதை விரிவாக பார்ப்போம்.
மக்களவையில் மொத்தம் எம்.பி.,க்களின் எண்ணிக்கை - 544
மக்களவையில் தற்போது எம்.பி.,க்களின் எண்ணிக்கை - 534
மக்களவையில் காலியாக உள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கை - 10
பெரும்பான்மையை நிருபிக்க தேவைப்படும் எம்.பி.,க்கள் - 268
பாஜக எம்.பி.,க்கள் எண்ணிக்கை - 273
சிவசேனா எம்.பி.,க்கள் -18
லோக் ஜனசக்தி எம்.பி.,க்கள் - 6
சிரோன்மணி அகாலிதளம் எம்.பி.,க்கள் - 3
பாஜக கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் எண்ணிக்கை - 41
பாஜக + கூட்டணி = 314
காங்கிரஸ் எம்.பி.,க்கள் எண்ணிக்கை - 48
திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் எண்ணிக்கை - 34
தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள் எண்ணிக்கை - 16
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் கட்சியின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை = 147
அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எண்ணிக்கை - 39
பிஜூ ஜனதா தளம் எம்.பி.,க்கள் எண்ணிக்கை - 20
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி.,க்கள் எண்ணிக்கை - 11
இந்திய தேசிய லோக் தளம் எம்.பி.,க்கள் எண்ணிக்கை - 2
சுயேச்சை எம்.பி.,க்கள் எண்ணிக்கை - 3
நடுநிலை வகிக்கும் கட்சிகளின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை = 73
மேற்சொன்ன நிலவரப்படி தனி கட்சியாக பெரும்பான்மை நிருபிக்க பாஜக-வுக்கு எந்த சிரமும் இல்லை. தந்து கூட்டணி கட்சியுடன் சேர்ந்து 314 எம்.பி.,க்கள் உள்ளனர். மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்கட்சிகளுடன் சேர்ந்தாலும் எம்.பி.,க்களின் எண்ணிக்கை 220. எனவே பெரும்பான்மை நிருபிப்பதில் பாஜகவுக்கு சிக்கல் இல்லை. அதேவேளையில் பாஜக கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் யாராவது எதிர்கட்சியை ஆதரித்தால் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்ற பா.ஜ.க முதல் முறையாக வாக்கெடுப்பை சந்திக்கிறது. 15 வருடம் கழித்து மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2003 ஆம் ஆண்டு இதே பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பாஜக கூட்டணி அரசு தோல்வியை சந்தித்தது. ஆனால் இம்முறை பாஜக வெல்ல போதிய எம்.பி.,க்கள் எண்ணிக்கை வைத்துள்ளது.