புட்காம் என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின்போது இன்று அதிகாலை தீவிரவாதிக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 1 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், அவன் வசமிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் லஸ்ஸிபோரா பகுதியை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர். இதையடுத்து, பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர்.
#UPDATE CRPF: One terrorist has been killed in Budgam encounter, operation continues. #JammuAndKashmir pic.twitter.com/JKEESUDqKq
— ANI (@ANI) June 30, 2019
இதை தொடர்ந்து, சுட்டுக் கொல்லப்பட்ட யங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கிகள், வெடி மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கின்றனரா என தேடுதல் நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது.