PM மோடி-ன் 2019 மக்களவைத் தேர்தல் வெற்றி ட்வீட் 'இந்தியாவில் கோல்டன் ட்வீட்'....!

சினிமா பெண் பிரபலங்கள்; அரசியல்வாதிகள் , விளையாட்டு வீரர்கள் என டாப் 10 பட்டியலை ட்விட்டர் வெளியிட்டு உள்ளது!!

Last Updated : Dec 10, 2019, 06:35 PM IST
PM மோடி-ன் 2019 மக்களவைத் தேர்தல் வெற்றி ட்வீட் 'இந்தியாவில் கோல்டன் ட்வீட்'....! title=

சினிமா பெண் பிரபலங்கள்; அரசியல்வாதிகள் , விளையாட்டு வீரர்கள் என டாப் 10 பட்டியலை ட்விட்டர் வெளியிட்டு உள்ளது!!

நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் மோடி, பதிவிட்ட ட்விட்டர் பதிவு, இந்த ஆண்டில் அதிக லைக் மற்றும் ரீ ட்வீட் பெற்ற பதிவு எனும் சிறப்பைப் பெற்றுள்ளது!!

டெல்லி: ட்விட்டர் உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதைக் காட்டும் உலகளாவிய பொது உரையாடல் தளமாக உருவெடுத்துள்ளது. செய்தி மற்றும் பொழுதுபோக்கு முதல் விளையாட்டு, அரசியல் மற்றும் அன்றாட ஆர்வங்கள் வரை, என்ன நடக்கிறது என்பதைக் காணவும் உரையாடலில் சேரவும் இந்த தளம் மக்களை அனுமதிக்கிறது. 

ட்விட்டர் தனது இணையதளத்தில், 2019 ஆம் ஆண்டின் தரவுகளை சேகரித்து ஆய்வு செய்துள்ளது. இது செய்தி, பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல் மற்றும் சமூக காரணங்களிலிருந்து வரும் ட்வீட்களை உள்ளடக்கியது, "சிறந்த ட்வீட், அதிகம் விவாதிக்கப்பட்ட ஹேஸ்டேக் தலைப்புகள் மற்றும் இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்பட்ட கணக்குகள் ஆண்டு நிச்சயமாக உங்களைப் புன்னகைக்கச் செய்யும், கொஞ்சம் அழும், உங்கள் இதயம் ஒரு துடிப்பைத் தவிர்க்கக்கூடும். "

#Loksabhaelections2019 முதல் #chandrayaan2 மற்றும் #cwc19 வரை, இந்த ஆண்டு, இந்திய அளவில் நடப்பாண்டு அதிக கவனம் பெற்ற பதிவுகளின் விபரங்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வென்றதையடுத்து பிரதமர் மோடி பதிவிட்ட ட்வீட் அதிக லைக்ஸ் மற்றும் ரீ ட்வீட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

ட்விட்டர் படி, "பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட் # loksabhaelections2019 இல் பாஜகவின் மறுதேர்தல் வெற்றியைக் கொண்டாடுகிறது. இது இந்த ஆண்டின் மிகவும் மறு ட்வீட் செய்யப்பட்ட மற்றும் விரும்பப்பட்ட ட்வீட் ஆகும், இது இந்தியாவில் கோல்டன் ட்வீட் ஆனது". இந்நிலையில், “நாங்கள் ஒன்றாக வளர்கிறோம்” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார்.

அரசியல் தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் பிரதமர் மோடியும் தொடர்ந்து ராகுல்காந்தி, அமித் ஷா, அரவிந்த கெஜ்ரிவால், யோகி ஆதித்யநாத், பியூஷ் கோயல், ராஜ்நாத் சிங், அகிலேஷ் யாதவ், கவுதம் காம்பீர், நிதின் கட்காரி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். பெண் அரசியல் தலைவர்கள் பட்டியலில் ஸ்மிருதி இரானி முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து பிரியங்கா காந்தி, சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், மம்தா பானர்ஜி, பிரியங்கா சதுர்வேதி, அல்கா லமபா, மாயாவதி, மெகபூபா முப்தி, அதிஷி ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.

விளையாட்டுத்துறையை பொருத்தவரை எம்.எஸ் தோனி பிறந்த தினத்துக்கு விராட் கோலி வெளியிட்ட ட்விட்டர் பதிவு அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. சினிமா துறையை பொருத்தவரை, நடிகர் விஜய் பகிர்ந்திருந்த பிகில் பட போஸ்டர் பதிவு அதிக ரீட்வீட் செய்யப்பட்ட பதிவு எனும் சிறப்பை பெற்றுள்ளது. ஹேஸ்டேக்குகளை பொருத்தவரை, லோக்சபா எலெக்சன்ஸ் 2019 எனும் ஆங்கில ஹேஸ்டேக் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து சந்திரயான் 2 எனும் ஹேஸ்டேக் உள்ளது. 

 

Trending News