இந்தியாவில் மட்டுமல்ல... இந்த நாடுகளிலும் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டும்

தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்தியாவில், இந்து மதத்தினர் கொண்டாடும் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும். இந்த தீபத் திருவிழா இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் வேறு சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?... 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 30, 2024, 05:44 PM IST
  • இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் வேறு சில நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது
  • சில நாடுகளில், தீபாவளி ஒரு தேசிய விடுமுறையாக கூட அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மலேசியாவில் இஸ்லாம் இங்கே அதிகாரப்பூர்வ மதம் என்றாலும், தீபாவளிக்கு பொது விடுமுறை உண்டு.
இந்தியாவில் மட்டுமல்ல... இந்த நாடுகளிலும் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டும் title=

தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்தியாவில், இந்து மதத்தினர் கொண்டாடும் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும். இந்த தீபத் திருவிழா இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் வேறு சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?... இந்தியாவைப் போலவே தீபாவளி கொண்டாடப்படும் சில நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

தீபாவளி மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் மற்றும் பிஜி உள்ளிட்ட சில நாடுகளில் பரவலாக கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில், தீபாவளி ஒரு தேசிய விடுமுறையாக கூட அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளம்

இந்தியாவைப் போலவே, நேபாளத்திலும், ஐந்து நாள் தீபாவளி கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில், தீபாவளி 'திகார்' என்று அழைக்கப்படுகிறது. இத்திருவிழாவில் மக்கள் தெய்வங்களை மட்டுமின்றி விலங்குகளையும் வழிபடுகின்றனர். முதல் நாளில் நேபாள மக்கள் பிரார்த்தனை செய்து பசுக்களை வணங்குகின்றனர். இரண்டாவது நாளில், நாய்களை கௌரவிப்பதற்காக குகுர் திகார் என கொண்டாடுகிறார்கள். மூன்றாவது நாளில், ராமரின் வெற்றி பெற்று திரும்பியதைக் கொண்டாட தீபங்களை ஏற்றி தீபாவளி கொண்டாடுகிறார்கள். நான்காவது நாளில் மரணத்தின் கடவுளான யமனை கொண்டாடி வழிபடுகிறார். இறுதியாக, ஐந்தாவது நாளில், வட இந்தியாவைப் போலவே பாய் தூஜ்  பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். 

இந்தோனேசியா

இந்தோனேசியாவில் இந்திய மக்கள்தொகை அதிகம் இல்லை என்றாலும் பாலி தீவு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில் பிரபலமானது. இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவைப் போலவே, பட்டாசுகளை எரிப்பது, விளக்குகளை  ஏற்றுவது, புத்தாடை அணிவது போன்ற அதே பாரம்பரியத்தை பின்பற்றி கொண்டாடுகிறார்கள். 

மலேசியா

மலேசியாவில் இஸ்லாம் இங்கே அதிகாரப்பூர்வ மதம் என்றாலும்,  தீபாவளிக்கு ஒரு பொது விடுமுறை உண்டு. மக்கள்தொகையில் சுமார் 8% உள்ள இந்துக்களின் மிக முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.  மலேசியாவில், பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தீபாவளிப் பண்டிகை ‘பசுமை தீபாவளி’ என்று பொருள்படும் ‘ஹரி தீபாவளி’ என்று அழைக்கப்படுகிறது. பட்டாசுகள் பண்டிகையின் ஒரு அங்கமாக இருந்தாலும், பிரகாசமாக எரியும் விளக்குகள், விளக்குகள் அதை ஈடு செய்கின்றன.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பின் இந்த ராசிகளுக்கு பொற்காலம்... ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

சிங்கப்பூர்

இறையாண்மை கொண்ட சிங்கப்பூரில் ஏராளமான இந்துக்கள் வசிக்கின்றனர். தீபாவளி, என்னும் தீபத் திருவிழா, சிங்கப்பூரில் கொண்டாடப்படும் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். சிங்கப்பூரில், 'லிட்டில் இந்தியா' என்று அழைக்கப்படும் ஒரு பகுதி உள்ளது, அங்கு இந்திய வம்சாவளியினர் அனைவரும் ஒன்று கூடி தீபத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். இருப்பினும், பட்டாசுகள் வெடிக்கப்படுவதில்லை.

பிஜி

பிஜியில் தீபாவளி பொது விடுமுறை தினமாக கொண்டாடப்படுகிறது. நியூசிலாந்தின் வடகிழக்கே சுமார் 1,100 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த தீவு நாட்டில் இந்துக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்தியாவில் கொண்டாடப்படும் அதே பாரம்பரியத்துடனும், கொண்டாட்டத்துடனும் ஆர்வத்துடனும் தீபாவளி திருவிழா கொண்டாடப்படுகிறது.

மொரிஷியஸ்

மொரிஷியஸில் கிட்டத்தட்ட இந்துக்கள் சுமார் 50% உள்ளனர். மேலும் அந்தநாட்டில் தீபாவளி முழு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.  தங்கள் வீடுகளை கோலங்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரித்து, புத்தாடை அணிந்து கொண்டாடுகிறார்கள்.

இலங்கை

தீபாவளி இலங்கையின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தியாவைப் போலவே தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். தீபத் திருவிழாவான தீபாவளி அந்நாட்டில் வசிக்கும் இந்துத் தமிழர் சமூகங்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்களில் பட்டாசு வெடித்தல், விளக்குகள் ஏற்றுதல் மற்றும் இனிப்புகள் விநியோகம் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | நரக சதுர்தசி... சொர்க்கம் போன்ற வாழ்வைப் பெறும் சில ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News