தூய்மையே இந்தியா சேவை திட்டத்திற்காக புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி அவர்கள், சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவத்தினை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்!
தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதாமக புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி அவர்கள் நேற்றைய தினம் நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள சாக்கடையில் இறங்கி சாக்கடையினை சுத்தம் செய்தார். இச்சம்பவதின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் தற்போது பாரத பிரதமர் மோடி அவர்கள் புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி அவர்களை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...
Narayanasamy Ji, kudos to you for leading from the front and inspiring others to strengthen the movement to clean India. https://t.co/z4Tdhu31eU
— Narendra Modi (@narendramodi) October 2, 2018
தூய்மையான இந்தியாவை உருவாக்குவது என்ற நோக்கத்துடன், தூய்மையே சேவை என்ற திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் கடந்த 15-ஆம் நாள் நாடு முழுவதும் தொடங்கிவைத்தார். இதற்காக காணொலிக் காட்சி மூலம் தொழிலதிபர் ரத்தன் டாடா, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்நிகழ்வின் போது 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட போது, தூய்மை இந்தியா திட்டத்தில் தானும் ஒரு பிரஜையாக பங்கெடுத்துக் கொண்டதாக அமிதாப் பச்சன் குறிப்பிட்டிருந்தார். மும்பையில் கடற்கரையை தூய்மைப்படுத்துவது உள்ளிட்டு, பல்வேறு துப்புரவுத் திட்டங்களில் தாம் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சி அமைச்சர்கள் அனைவரும் துடிப்புடன் தனகளது பகுதியில் தூய்மையான இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.