115 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மகாராணா அறைகள்.. விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள்

115 ஆண்டுகளுக்குப் பிறகு, தோல்பூரின் மஹாராணா பள்ளியின் 2-3 அறைகள் திறக்கப்பட்டன. அறைகளில் இருந்து எராளமான புத்தகங்களின் பொக்கிஷங்கள் கிடைத்தன

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 11, 2020, 06:22 PM IST
115 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மகாராணா அறைகள்.. விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் title=

ராஜஸ்தான், தவுல்பூர்: தோல்பூரின் மஹாராணா பள்ளி அறைகள் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் அப்படியே இருந்தது. 115 ஆண்டுகளுக்குப் பிறகு, தோல்பூரின் மஹாராணா பள்ளியின் 2-3 அறைகள் திறக்கப்பட்டன. அந்த பள்ளியின் அறைகள் திறக்கப்பட்டவுடன் அறைகளில் இருந்து எராளமான புத்தகங்களின் பொக்கிஷங்கள் இருந்தன. இந்தியாவின் பாரம்பரியத்தை உள்ளே வைத்திருந்த வரலாற்றின் ஒரு பகிதி பகுதி இருந்தது. 

115 ஆண்டுகளாக கணக்கிடப்படாத அதன் பள்ளி அறைகள் திறக்கப்படவில்லை. ஆனால் அந்த அறையின் கதவுகள் திறந்தபோது, ​​வரலாற்றில் மறைக்கப்பட்ட கதைகள் அடங்கிய பொக்கிசங்கள் வெளிவந்தன. இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தோல்பூரில் உள்ள மஹாராணா பள்ளியின் மூடிய அறைகள் திறக்கப்பட்டபோது, ​​அதில் இருந்து ஒரு புத்தக புதையல் வெளிவந்தன, இந்த புத்தகங்கள் 1905 ஆம் ஆண்டுக்கு முந்தையவை. மகாராஜ் உதய்பன் புத்தகங்கள் மீது தீராத காதல் கொண்டவர் என்று கூறப்படுகிறது. மகாராஜா உதயபன் சிங் பிரிட்டிஷ் காலத்தில் லண்டன் மற்றும் ஐரோப்பாவிற்கு பயணம் செய்தார். பின்னர் அவர் இந்த புத்தகங்களை அங்கிருந்து கொண்டு வந்துள்ளார். 

1905 ஆம் ஆண்டில், இந்த புத்தகங்களின் விலை 25 முதல் 65 ரூபாய் வரை இருந்தது. தற்போது சந்தையில் புத்தகங்களின் விலை லட்சம் ரூபாயை தாண்டும் என்று கூறப்படுகிறது. இங்கு கிடைத்த அனைத்து புத்தகங்களும் இந்தியா, லண்டன் மற்றும் ஐரோப்பாவில் அச்சிடப்பட்டன. இதில் 3 அடி நீளமுள்ள புத்தகங்கள் முழு உலக மற்றும் நாடுகளின் சுதேச மாநிலங்களின் வரைபடங்களை அச்சிட்டுள்ளன. வரலாற்றாசிரியர்கள் இந்த புத்தகங்களை அறிவின் பொக்கிஷங்கள் என்று வர்ணிக்கின்றனர்.

இந்த புத்தகங்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில், மாணவர்கள் இந்த புத்தகங்கள் மூலம் மிக முக்கியமான தகவல்களை அறிந்துக்கொள்வார்கள் என்றார்கள்.

Trending News